ஜனாதிபதித் தேர்தலில் நான் சஜித்துக்கே ஆதரவளிக்கிறேன்.அது  மைத்திரியின் வழி

” எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் நான் சஜித்துக்கே ஆதரவளிக்கிறேன்.அது 

மைத்திரியின் வழியை பின்பற்றுவதாகும்” – இவ்வாறு தெரிவித்தார் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எச்.எம் .பௌசி எம் பிஎதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் உங்களின் நிலைப்பாடு என்ன? அமைதியாக இருக்கிறீர்களே ? என்று கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.அவர் மேலும் கூறியதாவது ,

சுதந்திரக் கட்சி என்ன நிலைப்பாட்டை எடுத்தது என்பது பிரச்சினையல்ல..ஆனால் ஜனாதிபதி மைத்திரி ஒரு நிலைப்பாட்டை எடுத்துள்ளார்.ஊழல் செய்யாத மோசடி செய்யாத ஒருவர் ஜனாதிபதியாக வரவேண்டுமென அவர் விரும்புகிறார்.அது மறைமுகமாக சஜித் ஆதரவே.எனவே நான் ஜனாதிபதியை பின்பற்றுகிறேன்.
என்றார் பௌசி…
”என்னதான் இருந்தாலும் சுதந்திரக் கட்சி தீர்மானம் எடுத்து கோட்டாபய ராஜபக்சவை ஆதரிக்கிறது.அதன் தலைவர் மைத்ரி தானே ?” என்ற கேள்விக்கு பதிலளித்த பௌசி- ” நாட்டின் தலைவர் மைத்ரி தானே…அவரது அரசு என்று தானே சொல்கிறார் எனவே நாம் அதே நிலைப்பாட்டில் நான் இருக்கிறேன்” என்றார் பௌசி
”சரி..நேரடியாகவே சொல்லுங்கள்..கோட்டாபயவா சஜித்தா ?யாரை ஆதரிக்கிறீர்கள் ?” என்று கேட்டபோது பதிலளித்த பௌசி எம் பி – ” சஜித் ” என்றார்.
நன்றி : சிவா ராமசாமி