கொழும்பில் இருந்து  மட்டக்களப்பு நோக்கி சென்று கொண்டிருந்த ரயில் வண்டி தடம் புரண்டுள்ளது

நேற்றிரவு கொழும்பில் இருந்து  மட்டக்களப்பு நோக்கி சென்று கொண்டிருந்த
 (6079 இலக்க) பயணிகள் ரயில் வண்டி அவுக்கண-கலாவெவ இடையே தடம்புரண்டுள்ளது.

குறித்த புகையிரதமானது அங்கிருந்த பாலம் ஒன்றை கடக்க முன்னர் இந்த விபத்து விபத்து ஏற்பட்டதால் சுமார் 250 பயணிகள் பேராபத்திலிருந்து மீண்டுள்ளனர்.
இல்லையெனில் பெரும் உயிரிழப்புக்கள் ஏற்பட்டிருக்கும்.
நேற்றிரவு 11 மணியளவில் இடம்பெற்ற இந்த அனர்த்தத்தில் பயணிகள் எவருக்கும் எவ்வித சேதங்களும் ஏற்படவில்லை.
எனினும் ரயில் பெட்டிகள் தண்டவாளத்திலிருந்து சரிந்ததுடன்  மரத்திலாலான   சிலிப்பர் கட்டைகள்   என்பன உடைந்து சேதடைந்துள்ளது.