தமிழ்த் தலைமைகள் பேரம் பேசும் சக்தியாகமாறவேண்டும் – இரா.துரைரெட்ணம்

தமிழ்த் தலைமைகள் பேரம் பேசும் சக்தியாகமாறவேண்டுமென மு.கிழக்குமாகாணசபை சிரே~;ட உறுப்பினரும், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் முக்கியஸ்தருமான இரா.துரைரெத்தினம் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக அவரது அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றிய போதே இதனைத் தெரிவித்தார்.

முன்னாள் மாகாணசபை உறுப்பினர் தொடர்ந்தும் கூறுகையில்,

தமிழ் மக்கள் ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று சுயமாவே தீ;ர்மானம் எடுத்துள்ளதால் அதை ஏற்றுக்கொண்டு தமிழ்க்கட்சிகள் மக்களின் பக்கமே நின்று கட்சிகளுக்குள் பொது உடன்பாட்டுக்கு வந்து ஜனாதிபதி வேட்பாளருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு, ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டு, அவர் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டு குறிப்பிட்ட வருடத்திற்கு முன்பே விடயங்களை அமுலாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென

ஆயுதப்போராட்டம் வலுவடைந்திருந்த காலத்தில் வலுவான ஒரு தீர்வுத்திட்டத்தை ஒற்றுமையாக அமுல்படுத்த இயக்கங்களுக்குள் இருந்தமுரண்பாடு வழி விடவில்லை. 1987ம் ஆண்டுக்குபின் அரசியல் நீரோட்டத்திற்கு வந்தகட்சிகள் 2009ம்ஆண்டுக்குப் பின் ஆயுதம் மௌனிக்கப்பட்டதற்குப் பிற்பாடு இயக்கங்களும், அரசியற்கட்சிகளும் வடகிழக்கில் ஜனநாயகஅரசியலில் செயற்படக் கூடியவாறு அனைத்து கட்சிகள் பன்முத்தன்மை கொண்ட அனைத்து அமைப்புக்களும் சுயமாக வேலை செய்யக் கூடிய சூழல் உருவாக்கப்பட்டன.

இச் சூழலை சாதமாகமாகப் பயன்படுத்தி மத்திய அரசில் இருந்த ஒருசில அமைச்சர்களும் வடகிழக்கிலுள்ள ஒரு சிலகைக் கூலிகள் ஊடாக வடகிழக்கில் உள்ள வளங்களை சூரையாடுவதற்கும், ஒவ்வொரு குடும்பத்தையும் கடனாளியாக மாற்றுவதற்கும், ஒருபக்கச்சார்பாக அபிவிருத்தி வேலைகளைச் செய்வதற்கும், மணல் அகழ்வு, காட்டு மரங்களைத்தறித்தல், மதுபானசாலைதிறத்தல், மாவட்டத்தில் மோசமானவரி அறவீடு, போன்றவை தமிழ் மக்களை பலவீனப்படுத்தக் கூடிவாறான செயற்திட்டங்களை மத்திய அரசே ஆரம்பித்துள்ளன.

இவைமட்டுமின்றி வடகிழக்கைப் பிரித்துதமிழ் மக்களின் தற்காலிகத் தீர்வான 13வதுஅரசியல் தீர்வுத்திட்டத்தை அமுல்படுத்தாமல் நிரந்தரத் தீர்வை முன்வைக்காமல் மாவட்டத்தின் வறுமை நிலையில் முன்னேற்றம் வராமல் முஸ்லிம், சிங்கள அமைச்சர்கள் தங்களது சமூகத்திற்கு மட்டும் நிதி ஓதுக்கீடு போன்ற செயற்பாடுகள் கிழக்கு மாகாணத்தில் நடந்துவருவதோடு, தொழில் வாய்ப்புகள் புறக்கணிக்கப்பட்டது மட்டுமல்லாமல் யுத்தகாலத்தில் முஸ்லிம் பகுதிகள் மட்டும் அபிவிருத்தி செய்யப்பட்டு தமிழ்பகுதிகள் அபிவிருத்தி செய்யப்படாமல் இருந்த நிலையில் அனைத்து அபிவிருத்திகளும் வடக்கை நோக்கிச் செல்வதும் கிழக்கு அபிவிருத்திகள் தமிழ்த்தலைமைகளால் மௌனிக்கப் படுவதும் ஏற்புடையதல்ல.

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக தமிழ்மக்களிடம் உள்ளதுவாக்குப் பலம் மட்டுமே. அந்தவாக்குப்பலத்தை தமிழ் மக்கள் நிலையான அபிவிருத்திக்கும் அதிகாரப் பரவலாக்கலுக்கும் ஏனைய இனங்களின் அடக்குமுறையில் இருந்து விடுவிப்பதற்கும் தொழில் வாய்ப்பு போன்ற விடயங்களுக்கும் சார்பாக வாக்களிக்க தயாராக இருக்கின்றார்கள். எனவே தமிழ்த் தலைமைகள் பேரம் பேசும் சக்தியாகமாறவேண்டுமென்றார்.