தாக்குதல்களுக்கு பாவிக்கப்பட்ட சில வெடிமருந்துகள் தொடர்பில் ஆராய்வு

கிழக்கு, மாகாண புவிசரிதவியல் அளவீடு மற்றும் சுரங்கங்கள் பணியகத்தினால் இன்று காலை மட்டக்களப்பு ஈஸ்ட்லக்குன் விடுதியில் நடைபெற்றது இக் கலந்துரையாட்டில் கிழக்குமாகாண பிரதம செயலாளர் னு.ஆ.ளு அபேகுணவந்தன அவர்களின் வரவேற்பு உரையுடன் ஆரம்பிக்கப்பட்டது.

இந்த விழிப்புனர்வு கூட்டத்தில் புவிச்சரிவியல் அளவீடு மற்றும் சுரங்கங்கள் பணியகத்தின் தலைவர். அசேல இடவெல  மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் திருகோணமலை அரசாங்க அதிபர் N.A..A புஸ்பகுமார் மற்றும் அம்பாறை மேலதிக அரசாங்க அதிபர் வி.ஐகதீசன் மூன்று மாவட்டங்களினதும் பிரதேச செயலாளர்கள் மட்டக்களப்பு பிரதிபொலிஸ்மா அதிபர் தம்மிக்க தயானந்த திருகோணமலை பிரதிபொலிஸ்மா அதிபர் P.R.S. நர்கர்போல மற்றும் பொலிஸ்உத்தியோகஸ்த்தர்கள்,மாவட்டசெயலக உத்தியோகஸ்த்தர்களும் கலந்து கொண்டனர்.

கடந்த ஏப்ரல் தாக்குதல்களுக்கு பாவிக்கப்பட்ட சில வெடிமருந்துகள் தொடர்பில் ஆராயப்பட்டது. வர்தக நொக்கில் வெடிமருந்துகளை வழங்குவதில் புதிய சட்ட நடவடிக்கைகளை தெரிவு படுத்தப்பட்டது அவ்வாறு வழங்கப்படும் வெடிபொருள்களுக்கான அனுமதியை வழங்கும் அதிகாரிகளின் அதிகாரங்கள் மற்றும் சட்ட திருத்தங்களில் காணப்பட்டுள்ள விடையங்களும் ஆராயப்பட்டு விளக்கமளிக்கப்பட்டது.

வெடி மருந்துகளுக்காக வழங்கப்படும் அனுமதிப்பத்திரம் ஆகவும் கூடிய காலமாக ஒரு வருடமாக வரையறுக்கப்பட்டிருக்கும் இது போன்று மணல், கல்மலைகள் உடைத்தல் கிறவல் போன்றவற்றிக்கும் ஒருவருடமாக மட்டுபடுத்தப்பட்டிருக்கும் என தெரிவித்தனர்.

புவிசரிதவியல் அளவீடு மற்றும் சுரங்கங்கள் பணியகத்திற்கு அரசாங்க அதிபர்கள் பிரதேசசெயலாளர்கள் சூழல் பாதுகாப்பு அதிகார சபை பொலிஸ்உத்தியோகஸ்த்தர்கள் பாதுகாப்பு உத்தியோகஸ்த்தர்கள் போன்றோர்கள் எமது தினைக்கலத்திற்கு பங்களிப்பு செய்துள்ளனர்.

கடல் கணியங்கள் பாதுகாப்பது மற்றும் வெடிபொருட்கள் பாவனை தொடர்பான விளக்கங்களை பொறியலாளர் M.R.M. பாரீஸ் வழங்கினார் அதனைத் தொடர்ந்து மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயக்குமார் அவர்களின் நன்றிஉரையுடன் நிறைவடைந்தது.