ஓட்டமாவடி – பதுரியா கல்வீச்சு தாக்குதலில் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி

கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட ஓட்டமாவடி – பதுரியா,மாஞ்சோலை எல்லைப் பகுதியில் ஏற்பட்ட காணி தொடர்பான முரண்பாட்டில் கல்வீச்சுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் நேற்றிரவு  இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மிக நீண்ட காலமாகத் தமிழ், முஸ்லிம் காணி உரிமையாளர்களுக்கிடையில் காணி எல்லைப் பிரச்சினை இடம்பெற்று வரும் நிலையில் இவ்வாறு இரு குழுக்களுக்குமிடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

 

குறித்த பகுதியில் ஒற்றுமையாக வாழ்ந்து வரும் இரு சமூகத்தையும் மோதவிட்டு அரசியல் இலாபம் தேட சில அரசியல்வாதிகள் முயல்வதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

அத்தோடு எமது காணிகளின் வேலிகள் தொடர்ந்தும் சிலரினால் சேதமாக்கப்படுவதினாலும்,  இப்பகுதியில் தொடர்ந்தும் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாமலிருக்கவும், இரு சமூக மக்களும் ஒற்றுமையோடு வாழக் குறித்த பகுதியில் பாதுகாப்பு காவலரன் ஒன்றினை அமைக்கும் படி அப்பகுதி முஸ்லிம் தரப்பினர் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

குறித்த சம்பவத்தில் கல்வீச்சு தாக்குதலில் காயமடைந்த நபரொருவர் மீராவோடை வைத்தியசாலை யில் சிகிச்சை பெற்று வருகின்றார்.