ஜனாதிபதிகள் தமிழ் மக்களுடைய உரிமைகளை ஏமாற்றினர் : சாடுகிறார் இரா.துரைரெட்ணம்

ஜனாதிபதியாக கடந்த காலங்களில் தெரிவு செய்யப்பட்டவர்கள் தமிழ்மக்களுடைய உரிமைகள் தொடர்பாக ஏமாற்றியதே வரலாறாகும். இதை நன்கு உணர்ந்து தமிழ்த் தலைமைகள் மிகவும் நிதானத்துடன் சிந்தித்து தமிழ்மக்களுக்கு முன் கருத்துக்களைக் கூறவேண்டுமென முன்னாள் கிழக்குமாகாணசபை சிரேஸ்ட உறுப்பினரும், ஈழமக்கள் புரட்சிகரவிடுதலை முன்னணியின் முக்கியஸ்தருமான இரா.துரைரெத்தினம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

எதிர்வருகின்ற ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்மக்களின் வாக்குகளைப் பெறுவதற்காக ஒவ்வொரு வேட்பாளர்களின் கட்சித் தலைவர்கள், வேட்பாளர்கள்
சந்தர்ப்;பவாதமாக கருத்துக்களை தெரிவிக்கின்றனர். கடந்தகாலங்களில் தெரிவுசெய்யப்பட்ட ஜனாதிபதிகள் பல உறுதிமொழிகளை அளித்து பேரினவாத இரண்டு பிரதானமான கட்சிகளும் தங்களுக்குள் முரன்பாட்டை வைத்துக் கொண்டு தமிழ்மக்களுக்கான உரிமைகள் தொடர்பான விடயங்களை குழப்பியதே வரலாறாகும்.

இந்தவிடயம் தொடர்பாக தமிழ்மக்களுக்கும், தமிழ்கட்சி தலைமைகளுக்கும் சர்வதேசநாடுகளுக்கும் நன்குபுரியும். பெரும்பான்மையான சிங்கள மக்களின் வாக்குகளைப் பெறுவதற்காக இரண்டு பிரதானமான கட்சிகளும் தமிழர்களுக்கான தீர்வுத் திட்டத்தை குழப்பியதே வரலாறாகும் எதிர்காலத்திலும் தீர்வுத்திட்டத்தை முன் வைப்பதிலும் பேரினவாதக்கட்சிகள் சிங்கள மக்களின் எதிர்ப்பையும் தாண்டி ஒரு தீர்வுத் திட்டத்தை முன் வைப்பதில் மீண்டும் இழுபறிநிலை தோற்றுவிக்கப்படும். இதை நன்கு உணர்ந்து தமிழ்த்தலைமைகள் மிகவும் தெளிவாக நிதானத்துடன் கடந்தகால அனுபவங்களை பாடமாக வைத்துக் கொண்டு செயற்பட வேண்டும்.

தமிழ்மக்களைப் பொறுத்தவரையில் எமக்கு இருக்கும் பலம் வாக்குரிமை மட்டுமே.
இந்தவாக்குப்பலத்தால் எமது உரிமைகளைப் பெறவேண்டிய நிலைமைக்கு
எமதசமூகம் தள்ளப்பட்டுள்ளது என்பது எமது துரதிஸ்டமே.

இந்தவாக்குப்பலத்தை ஒரு சில தமிழ்த்தலைமைகள் கண்ணை மூடிக்கொண்டு பால் குடிப்பதைப் போல வாக்களிக்கச் சொல்லமுடியாது. எமதுசமூகம் எமது உரிமைக்காக பல ஆண்டுகாலமாக அனைத்தையும் இழந்து நம்பி ஏமாந்து இன்று விரக்தியுடன் இருக்கும் சமூகமாகும். உரிமைகள் தொடர்பாக வீரம் சொரிந்த சமூகமாகும். ஆனால் இனக்கப்பாடு, விட்டுக்கொடுப்பு, பலமொழி, பலகலாசாரம், ஜனநாயகத்தன்மை, விழுமியங்கள் நேசிக்கும் தன்மையோடு மனிதாபிமானத்தையும் கடைப்பிடிக்கும் சமூகமாகும்.

உரிமைகள் பெறுவதற்காக தங்களது உயிர்களை தியாகமாக வழங்கிய சமூகம்
இப்படிப்பட்ட வலிமைமிக்க சமூகத்தில் உரிமைகளை விட்டுக்கொடுத்து விடமுடியாது. இன்றையகால சூழல் காலத்தின்தேவை, வாக்குப்பலத்தால் எமது உரிமைகளை பெறவேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கின்றோம்.

வடகிழக்கைப் பொறுத்தவரையில் கடந்த காலத்தில் தமழர்களுக்குரிய உரிமைகள் தொடர்பாக மாகாணசபை முறைமை அமுல்படுத்தப்பட்டு இதற்கான அதிகாரங்கள் பாராளுமன்றத்தில் சட்டவாக்கம் செய்யப்பட்டு அமுலாக்கப்படுவதில் பல குறைபாடுகள் இருக்கின்ற நிலையில் புதியதொரு தீர்வை நோக்கிசெல்கின்ற நிலையில் எம்மக்களுக்காக புதியதீர்வுத்திட்டத்திலும் குறைகள் உள்ளதாக கூறப்படுகின்ற நிலையில் சர்வதேச ரீதியான பார்வைகள்தீர்வுத்திட்டம் தொடர்பாககருத்துக்கள் கூறும் காலகட்டத்தில் சர்வதேச ரீதியான நாடுகளின் இலங்கை அரசுமீது அழுத்தம் கொடுக்கின்ற சந்தர்ப்பத்தில் தோசிய ரிதீயாக ஒற்றுமைகள் சர்வதேசத்தால் பலவீனம் அடைந்த நிலையில் ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்படப் போகின்றது. ஆனால் பாராளுமன்றத்திற்கு அதிகாரமும், ஜனாதிபதிக்கு அதிகாரம் குறைந்தநிலையில் இத்தேர்தல் நடைபெறப்போகின்றன. தமிழ்த்தலைமைகள் நன்கு அவதானித்து தமிழ்மக்களை சரியாகப் பயன்படுத்தி ஒவ்வொரு வாக்குகளையும் தமிழ்மக்களின் நலன் சார்ந்த விடயத்திற்கு பயன்படு;துவதற்கு மிகவும் நிதானமான முடிவுகளை எடுக்குமாறு கேட்டுக் கொள்கின்றேன். என்றார்.