எருவில் பொது மயானத்தில் சிரமதானம்.

(எருவில் துசி)

எருவில் பொது மயானம் மற்றும் அதனை அண்டிய வீதிகள் என்பவற்றில் இடம்பெற்ற சிரமதானமானது 500 க்கும் மேற்பட்ட பொது மக்கள் மற்றும் பிரதேச சபை JCB வாகனத்தின் பங்களிப்புடன் வெற்றிகரமாக நடைபெற்றது.

நிகழ்வில் பொது மயானமானது குப்பைகள் அகற்றப்பட்டு பற்றைகள் வெட்டி அகற்றப்பட்டு பூரணமாக சுத்தம் செய்யப்பட்டு AMCOR அமைப்பினால் மயான கிணற்றுக்கும் நுளம்பு வலை போடப்பட்டது. மயானவீதியின் இருபுறமும் காணப்பட்ட பிரப்பன்காடுகள் மற்றும் இனந்தெரியாத நபர்களால் வீசப்பட்ட குப்பைகள் போத்தல்கள் JCB வாகனத்தினால்  புதைக்கப்பட்டது. வீதியின் இருமருங்கிலும் மண் அணைக்கப்பட்டுள்ளது.

இன்றைய நிகழ்வுக்கு வருகை தந்து சிரமதான நிகழ்விலே கலந்து கொண்ட பொது மக்களுக்கும், கிராம அபிவிருத்தி சங்கங்கள், விளையாட்டு கழகங்கள், கலைக்ககழகங்கள், இளைஞர் கழகங்களை சேர்ந்த உறுப்பினர்ளுக்கும் மற்றும் கண்ணகி அம்மன் ஆலய பரிபாலன சபை தலைவர் அவர்கட்கும், சமுர்த்தி உத்தியோகிஸ்தர்களுக்கும் விசேடமாக ம.தெ.எ .பற்று தவிசாளர் அவர்கட்கும் பொது மக்கள் நன்றிகளை  தெரிவித்தமை அவதானிக்கத்தக்கது மேலும் இன் நிகழ்வினை சிறப்பாக ஒழுங்கமைத்து நடாத்தியமைக்கு பிரதேச சபை வட்டார உறுப்பினர் சி.காண்டீபனுக்கு  மக்கள் வாழ்துக்களையும் கூறியது அவதானிக்க கூடியதாக இருந்தது.