அரசடித்தீவில் விசேட தேவையுடைய மாணவர்களுக்கிடையிலான விளையாட்டுப்போட்டி

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட விசேட தேவையுடைய மாணவர்களுக்கிடையிலான விளையாட்டுப் போட்டி இன்று(18) வியாழக்கிழமை அரசடித்தீவு விக்னேஸ்வரா மகா வித்தியாலய மைதானத்தில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய விசேட அலகுப்பிரிவினரின் ஏற்பாட்டில் நடைபெற்ற போட்டியில், மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்;ட வவுணதீவு பரமேஸ்வரா வித்தியாலயம், அரசடித்தீவு விக்னேஸ்வரா மகா வித்தியாலயம், இலுப்படிச்சேனை அம்பாள் வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் அமைக்கப்பட்டுள்ள விசேட அலகு மாணவர்கள் இவ்விளையாட்டுப் போட்டியில் பங்குபற்றினர்.

இதன்போது, குண்டுபோடுதல், நிண்டு நீளம் பாய்தல், சமனிலை ஓட்டம், 50மீற்றர் ஓட்டம் என 22நிகழ்ச்சிகள் நடைபெற்றமையுடன், ஒலிம்பிக் தீபம் ஏற்றல், விசேட தேவையுடைய மாணவர்களின் வரவேற்புநடனம், உடற்பயிற்சிக் கண்காட்சி போன்றனவும் நடைபெற்றன. இதன்போது வெற்றியீட்டிய மாணவர்களுக்கு சான்றிதழ்களும், பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய, வலயக்கல்விப் பணிப்பாளர் சி.சிறீதரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், கந்தளாய் வலயக்கல்விப் பணிப்பாளர் ஜே.தர்மதிலக, கிழக்கு மாகாண உதவிக்கல்விப் பணிப்பாளர் ரி.பார்த்தீபன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.