புதிய சமுர்த்தி பயனாளிகளுக்கான உரித்து பத்திரம் கையளிக்கும் நிகழ்வு

மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் பிரிவின், மாவடிமுன்மாரி சமுர்த்தி வங்கி பிரிவிற்குட்பட்ட, புதிய சமுர்த்தி பயனாளிகளுக்கான உரித்து பத்திரம் கையளிக்கும் நிகழ்வு வியாழக்கிழமை(27) இடம்பெற்றது.

கொக்கட்டிச்சோலையில் அமைந்துள்ள பிரதேச கலாசார மண்டபத்தில், பிரதேச செயலாளர் தெட்சணகௌரி தினேஸ் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது.

இந்நிகழ்வில், செயலக கணக்காளர், சமூக சேவை உத்தியோகத்தர், சமுர்த்தி தலைமையக முகாமையாளர், வங்கி முகாமையாளர்களும் கலந்து கொண்டனர்.