கல்முனை மாநகரசபை உறுப்பினர்கள் கட்சியிலிருந்து நீக்கம் (காத்தமுத்து கணேசன் மற்றும் சுமித்திரா ஜெகதீசன்)

ஊடகச் செய்தி
இலண்டணில் இருந்து ஆனந்தசங்கரி
22.06.2019
கல்முனை மாநகரசபை உறுப்பினர்கள் கட்சியிலிருந்து நீக்கம்;
கல்முனை மாநகரசபை உறுப்பினர்களான கௌரவ. காத்தமுத்து கணேசன் மற்றும் சுமித்திரா ஜெகதீசன் ஆகியோர் கட்சியின் சகல உறுப்புரிமைகளிலிருந்தும் நீக்கப்பட்டுவிட்டார்கள்.

சமீப காலமாக இவர்கள் இருவரும் கட்சிக்கு எதிரான செயற்பாடுகளிலும், கட்சி விரோத நடவடிக்கைகளிலும் மற்றும் கட்சியின் கொள்கைகளுக்கு முரணானவகையிலும் செயற்பட்டுவந்துள்ளார்கள் என்பது அவர்கள்மீது மேற்கொண்ட விசாரணைகள் மூலமாக தெரியவந்துள்ளது.
அதுமட்டுமல்லாமல் காத்தமுத்து கணேசன் அவர்கள் கல்முனை மாநகரசபை பிரதி முதல்வர் என்ற பதவியை வைத்துக்கொண்டு பல மோசடி நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுவந்துள்ளார் என்பதும் மேலதிக விசாரணைகள் மூலமாக தெரியவந்துள்ளது.

இவர்கள் இருவரிடமும் இனிமேல் தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் எவரும் கட்சி ரீதியான எவ்வித தொடர்புகளையும் வைத்துக்கொள்ள வேண்டாம் எனக் கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.
விரைவில் அவர்கள் இருவரையும் கல்முனை மாநகரசபை உறுப்பினர் பதவிகளில் இருந்து நீக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்பதனை கட்சியின் சகல உறுப்பினர்களுக்கும் அறியத் தருகின்றேன்.

வீ. ஆனந்தசங்கரி
செயலாளர் நாயகம்
தமிழர் விடுதலைக் கூட்டணி