யாராவது உயிரைத்துறக்கநேரிட்டால் அதற்கான முழுப்பொறுப்பையும் அரசாங்கமே பொறுப்பேற்கவேண்டும்.

ஒரு பக்கம் முஸ்லிம்களைப் பகைத்துக்கொள்ளாமலும்மறுபக்கம் தமிழ்மக்களை அரவணைத்தக்கொண்டு அரசியல் செய்யமுற்படுவதைக் காணலாம்.
இவ்வுண்ணாவிரதப்போராட்டத்தில் யாராவது உயிரைத்துறக்கநேரிட்டால் அதற்கான முழுப்பொறுப்பையும் அரசாங்கமே பொறுப்பேற்கவேண்டும். எமக்கான தீர்வு கிடைக்கும்வரைபோராட்டம் தொடரும். 

இவ்வாறு கல்முனையில்இடம்பெற்றுவரும் உண்ணாவிரதப்போராட்டத்திற்கு ஆதரவுவழங்கும்வகையில் காரைதீவில் இடம்பெற்றுவரும் சுழற்சிமுறைஉண்ணாவிரதப்போராட்டத்தில் கலந்துகொள்ள (20) வியாழக்கிழமைவந்த மட்டு.மாவட்ட தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்றஉறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்:

த.தே.கூட்டமைப்பும் சரி அதற்கும் முன்பு த.வி.கூட்டணியும் சரிபாராளுமன்றில் எதிர்க்கட்சிகளாகவே இருந்துவந்துள்ளன. ஆனால் 2015ற்குப் பிற்பாடு அரசியல் ரீதியாக ஒருவகையிலான நல்லிணக்க அரசியலை த.தே.கூட்டமைப்பு செய்துவருகிறது.
அன்றுதொட்டு இன்றுவரைகல்முனை தமிழ்ப்பிரதேச செயலக தரயுர்த்தல்விவகாரத்தில் முழுமூச்சாக ஈடுபட்டு வருகின்றோம்.
பல தடவைகள் பிரதமமந்திரியைச்சந்தித்துப் பேசியுள்ளோம். வாக்குறுதிகள் வழங்கப்பட்டன. ஆனால் நிறைவேற்றப்படவில்லை.

ஹரீஸ் என்கிற முஸ்லிம் அரசியல்வாதியால் இவ்விவகாரம் இழுத்தடிக்கப்பட்டுவருவதனை பாராளுமன்றில் 11வருடங்கள் எம்.பி.யாக இருந்தவன் என்றவகையில் நான் நன்கு அறிவேன்.
இதனிடையே எமது பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் பாராளுமன்றில் பேசுகையில் இத்தரமுயர்த்தலைச்செய்யாவிடின் அரசுக்கான எமது ஆதரவை விலக்கிக்கொள்ளநேரிடும் என்று தெரிவித்துள்ளார் என்றார்.