கட்டித்தழுவியவாறு தீக்குளிப்போம் என மதகுருமார் தெரிவிப்பு

கல்முனையில் 4வது நாளாக போராட்டம் திவீரமடைகிறது!
கட்டித்தழுவியவாறு தீக்குளிப்போம் என மதகுருமார் தெரிவிப்பு!
50மகளிர் போராட்டத்தில் குதிப்பு: ரத்னஎலிய தேரர் வருகை:ஜனத்திரள்: பொலிசார் குவிப்பு:
 காரைதீவு  நிருபர் சகா
 

கல்முனையில் வடக்கு பிரதேச செயலகத்தைத்தரமுயர்த்தக் கோரி நடைபெற்றுவரும் உண்ணாவிரதப்போராட்டம் 20) வியாழக்கிழமை நான்காவது நாளாகத் தொடர்ந்தது.

கல்முனை சுபத்ரா ராமய விகாராதிபதி வண.ரண்முத்துகல சங்கரத்ன தேரர் கல்முனை முருகன் ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ க.கு.சச்சிதானந்தசிவக்குருக்கள் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் கல்முனை மாநகரசபை உறுப்பினர்களான சந்திரசேகரம் ராஜன் அ.விஜயரெத்தினம் அனைத்து இந்து ஆலயங்களின் ஒன்றியத்தலைவரும் தொழிலதிபருமான  கே.லிங்கேஸ்வரனும் ஆகியோர் உண்ணாவிரதத்தில் உள்ளனர்.
.
உண்ணாவிரதிகளின் உடல்நிலை மிக மோசமாகிவருகிறது. மருத்துவர்கள் இடையிடையே வந்து பரிசோதனை செய்கின்றனர். உண்ணாவிரதிகள்  வைத்தியசாலைக்குச்செல்ல மறுக்கின்றனர். படுத்தபடுக்கையில் கிடக்கிறார்கள்.

மதகுருக்களான கல்முனை சுபத்ரா ராமய விகாராதிபதி வண.ரண்முத்துகல சங்கரத்ன தேரர் கல்முனை முருகன் ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ க.கு.சச்சிதானந்தசிவக்குருக்கள் ஆகியோர் கூட்டாகத் தெரிவிக்கையில் இப்போராட்டம் வெற்றியளிக்காவிடில் நாம் இருவரும் கட்டித்தழுவியவாறு தீக்குளிப்போம் என்று கூறினர்.

இதேவேளை  ஜம்பது(50) மகளிர் அடையாள உண்ணாவிரதப்போராட்டத்தில் குதித்துள்ளனர்.
வழமைக்குமாறாக ஜனவெள்ளம் ஒன்றுகூடியுள்ளது.அதனைக்கட்டுப்படுத்த போக்குவரத்துப் பொலிசார் சற்றுசிரமப்பட்டனர்.

கல்முனைப்பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் பி.சூரியபண்டார சிரேஸ்;பொலிஸ்அத்தியட்சகர் ஆகியோர் நேரடியாக வந்து ஏற்பாட்டாளர்களுடன் கலந்துரையாடினர்.
நேற்றையதினம் பாராளுமன்ற உறுப்பினர் வண.ரத்னஎலியதேரர் மட்டு.விகாராதிபதி வண.அம்பிட்டிய தேரர் மற்றும் சமயகுருமார்கள் வருகைதந்தனர்.

தமிழ்மக்கள் விடுதலைமுன்னணியின் செயலாளர்நாயகம் செ.கஜேந்திரன் தமிழ்மக்கள்விடுதலைப்புலிகளின் பொதுச்செயலாளர் பு.பிரசாநதன் மகளிரணித்தலைவி   செல்வி த.தே.கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பி.அரியநேத்திரன் பிரதேசசபைத்தவிசாளர்களான சி.புஸ்பலிங்கம்(கொக்கட்டிச்சோலை) சோ.மகேந்திரலிங்கம்(ஆரையம்பதி) முன்னாள் மாகாணசபை உறுப்பினர் மா.நடராஜா த.அ.கட்சி உறுப்பினர் சாணக்கியன் உள்ளிட்ட பல தமிழ்த்தலைவர்கள் அரசியல் வேறுபாடின்றிக்கலந்துகொண்டனர்.

மக்களின் ஆதரவு நாளுக்குநாள் அதிகரித்துவருகின்றது. திங்களன்று ஒரு கொட்டிலில் 4கதிரைகளில் 4பேர் ஆரம்பித்த இவ்வவுண்ணாவிரதப்போராட்டம்  12கொட்டில்களாகியது. மட்டுமல்லாமல் கட்டில்கள் மெத்தைகள் மின்விசிறிகள் எனப் பரவலாக விசாலாமாகிவருகிறது.

நேற்றையதினம் சேனைக்குடியிருப்பு தரவைப்பிள்ளையாhர் ஆலயம் போன்ற இடங்களிலிருந்து மக்கள் சாரிசாரியாக பதாதைகளுடன் பேரணியாக உண்ணாவிரதஇடத்திற்கு வந்துசேர்ந்தனர்.