கல்யாணக்கால் நடுதலுடன் கண்ணகை அம்பாள் வைகாசிச்சடங்கு ஆரம்பம்!

(காரைதீவுநிருபர் சகா)
 
வரலாற்றுப்பிரசித்திபெற்ற காரைதீவு  ஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயத்தின் வருடாந்த வைகாசி திருக்குளிர்த்திச்சடங்கு 
 
நேற்று(13) திங்கட்கிழமை கடல்தீர்த்தம் எடுத்துவந்து கல்யாணக்கால் நடுதலுடன் ஆரம்பமாகியது. 
 
ஆலயத்திலிருந்து நேராக கடலுக்குசென்று கடல்தீர்த்தம் எடுத்துவந்து ஏலவேபார்த்துவைத்த பூவரசுமரக்கிளையை முறித்தெடுத்து ஆலயத்திற்குகொண்டு சென்று கூறைச்சாறிகள் அணிவித்து பின்னர் ஆலயத்தினுள் கல்யாணக்காலாக நட்டனர்.
 
15ஆம் திகதி முதல் 19ஆம் திகதி வரை மதியப்பூஜை பகல் 12மணிக்கும் மாலை 5மணிக்கு சடங்குப்பூஜையும் ஊர்சுற்றுக்காவியம் பாடுதல் நிகழ்வும் இடம்பெறும்.
 
20ஆம் திகதி திங்களன்று பிற்பகல் 3மணிக்கு பொங்கலுக்கு நெல் குற்றும் வைபவம் இடம்பெறும். 21ஆம் திகதி அதிகாலை 5மணிக்கு திருக்குளிர்த்hiபாடலுடன் நிறைவடையும்.
எட்டாம்சடங்குப்பூஜை 27ஆம் திகதி திங்களன்று மாலை 5மணிக்கு இடம்பnறும்.அதற்கு முன்னதாக 4மணிக்கு பொங்கல் பானைகள் ஒப்படைக்கப்படவேண்டும் என ஆலயநிருவாகம் கேட்டுள்ளது.

6 Anhänge