கல்முனை உவெஸ்லி மாணவர்களுக்கு பாதுகாப்பு இல்லை! பாடசாலை மூடப்படும் அபாயம்!!

கல்முனை உவெஸ்லி மாணவர்களுக்கு பாதுகாப்பு இல்லை! பாடசாலை மூடப்படும் அபாயம்!!
சிரேஸ்ட பிரதிப்பொலிஸ்மாஅதிபரிடம் நேரில்சென்று முறைப்பாடு!
 (காரைதீவு  நிருபர் சகா)
 
கல்முனை மாநகரின் மத்தியிலுள்ள கல்முனை உவெஸ்லி உயர்தரக்கல்லூரி மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. இந்நிலை தொடர்ந்தால் இனிமேல் மாணவர்கள் பாடசாலைக்கு சமுகமளிக்கமாட்டார்கள்.அதனால் பாடசாலை மூடப்படும் அபாயமுள்ளது என பெற்றோர்கள் கூறுகின்றனர். எனவே உறுதியான நடவடிக்கை எடுக்கவேண்டும் என கிழக்குப்பிராந்திய சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபர் கபிலஜெயசேகரவிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

 
கல்முனை சுபத்ராராமய விகாராதிபதி வண.ரண்முத்துக்கல சங்கரத்ன தேரர் கல்முனை தேவாலய போதகர் எ.கிருபைராஜா கல்முனைமாநகரசபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் ஆகியோர் நேற்று அம்பாறைக்குச்சென்று நேரில் மகஜரைக்கையளித்து முறையிட்டனர்.
 
தமிழத்தேசியக்கூட்டமைப்பின் கல்முனைமாநகரசபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் மகஜரைக்கயைளித்தார்.
அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
 
கல்முனை உவெஸ்லிக்கல்லூரியின் தென்பக்க பிரதான நுழைவாயிலுக்கு எதிர்ப்பக்கம் கல்முனை மாநகரசபையின் பிரதான சந்தை உள்ளது.
சந்தைக்குவரும் பலவாகனங்கள் கல்லூரியின் தென்புற மதிலோடு நிறுத்திவைக்கப்படுவதால் மாணவர்கள் அப்பக்கத்தால் வர அ ஞ்சுகின்றனர். அவை ஆபத்தாக அமையலாமென அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளஅது.
 
பாடசாலைக்கு அருகில் வாகனங்கள் நிறுத்திவைக்கப்படக்கூடாது என்று அரசாங்கம் கடுமையாகக்கூறியிருக்கின்ற அதேவேளை கல்முனையில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் இவ்விதம் பாடசாலையின் பாதுகாப்புக்கு இடைஞ்சலாக நிறுதத்திவைக்கப்படுவது ஆபத்தாக அமையும் என பெற்றோர்கள் பல தடவைகள் முறையிட்டும் மாநகரசபையோ கல்முனைப்பொலிசோ நடவடிக்கை எடுக்கவில்லையென அவர்கள் கூறுகின்றனர்.
 
கடந்த 07ஆம் திகதி கல்முனை தமிழ்ப்பிரதேச செயலகத்தில் நடைபெற்ற பாதுகாப்பு சம்பந்தமான கூட்டத்திலும் இதுவிடயம் பிரஸ்தாபிக்கப்பட்டது. நடவடிக்கை எடுப்பதாக வந்திருந்த பொலிஸ் உத்தியோகத்தர் கூறியபோதிலும் அடுத்தடுத்த நாட்களில் வாகனங்கள் பாடசாலையோடு சேர்த்து நிறுத்திவைக்கப்பட்டிருந்தன. நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
 
இதனால் பாடசாலைக்கு மாணவர்கள் வருவது குறைந்துள்ளது.இந்நிலை நீடித்தால் பாடசாலையை மூடவேண்டிவரலாம். எனவே வாகனங்களை வேறிடத்தில் நிறுத்தி பாடசாலையை ஆபத்தின்றி பயமின்றி நடாத்த உதவுமாறு வேண்டுகின்றோம். எனக் கேட்டுக்கொண்டனர்.
 
பதிலளித்த சிரேஸ்ட பிரதிப்பொலிஸ்மாஅதிபர் கபில நான் கல்முனை பிரதான பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு உத்தரவிடுகிறேன். நீங்கள் பயமில்லாமல் பாடசாலையை நடாத்தலாம் என்றார்.
 
அதன்படி காலை கல்முனைபொலிஸ்பொறுப்பதிகாரி ஜெயநித்தி விகாரைக்குச்சென்று வண. ரண்முத்துகல சங்கரத்ன தேரரைச்சந்தித்து உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
 
நாளை(13) திங்கள்தான் நடவடிக்கை பற்றித் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.