அவசரகால சட்டத்தின் கீழ் ஊடக சுதந்திரம்

இலங்கைபத்திரிகை ஸ்தாபானம், யுனெஸ்கோவுடன் இணைந்து இன்று 2019 ஆம் ஆண்டு மே மாதம் 3 ஆம் திகதி அன்று “ஜனநாயத்திற்காக ஊடகம்: ஊடகவியல் மற்றும் தேர்தல்கள் தவறான காலங்களில்” எனும் தொனியில் உலக ஊடக சுதந்திர தினத்தினை கொண்டாடுகின்றது.

 

உயிர்த்தெழுந்த ஞாயிறு அன்று துயர் சம்பவங்கள் இடம்பெற்றுள்ள நிலையில் இலங்கையில் ஊடக சுதந்திர தினம் கொண்டாடப்படுவது மீண்டும் ஊடக சுதந்திரத்தினை சற்று நெருக்கடியான சூழ்நிலைக்கு இட்டுச் சென்றுள்ளது.

ஊடக சுதந்திரமானது ஜனநாயகத்தின் அடிப்படையாக அமைகின்ற நிலையில், “பாதுகாப்பு ஏற்பாடுகள்” இன் கீழ் அடிக்கடி நசுக்கப்படுவதோடு பல்வேறு காரணங்களினால் கட்டுப்படுத்தப்பட்டும் வருகின்றது.

ஊடகவியலாளர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டியதோடு தகவல்களை அறிவதற்காக மகக்ளுக்கு இருந்து வருகின்ற வசதிகள் பாதுகாக்கப்படவேண்டி இருப்பதோடு மற்றும் வன்முறை, வெறுப்பை ஏற்படுத்தாத நியாயமானதும் நடு நிலையானதுமான அறிக்கையிடல் ஊக்குவிக்கப்பட வேண்டும். தகவல் கையாளுகை, திட்டமிடப்பட்ட புகைப்படங்கள், கருத்தியல் ரீதியாக பாராபட்சமான அறிக்கைகள் மற்றும் தவறான தகவல்களை பரப்பும் பொய்யான செய்திகள் தற்போது தேசிய சமாதானத்திற்கும் தகவலின் வெளிப்படைத் தன்மைக்கும் ஊடகத்தின் நம்பகத்தன்மைக்கும் பாரிய அச்சுறுத்தலாக காணப்படுகின்றது.

ஜனநாயக் கோட்பாடுகளுடன் இயைந்த தகவலறிந்த பொது மக்களை உருவாக்கும் ஆணையையும், யுனெஸ்கோ சாசனத்தின் வெளிப்பாடான கருத்துச் சுதந்திரம் மற்றும் அதன் வெளியீடுகள்: ஊடகசுதந்திரம் மற்றும் தகவல் சுதந்திரம் என்பவற்றை ஊக்குவிப்பதனை இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் பிரதான இலக்காக கொண்டுள்ளது.

“எல்லைகளை தாண்டிய ஊடகவியலாளர்கள்;” (Reporters Without Borders) (RSF)வெளியிடப்பட்டுள்ள சர்வதேச ஊடக சுதந்திர தின அட்டவணையில் 180 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் மேற்கொள்ளப்பட்ட கணிப்பீட்டின் அடிப்படையில் இலங்கையில் ஊடகத்துறை 2016 ஆம் ஆண்டில் இருந்து தொடர்ச்சியாக 4 வருடங்களாக “கடினமான” நிலைமையில் உள்ளதாக அடையாளப்படுத்தப்பட்டிருக்கின்றது.

04 வருடங்களுக்கு முன்னர் ஆரோக்கியமறற்தாக காணப்பட்ட இலங்கை ஊடகவியலாளர்களினதும் ஊடகங்களினதும் எவ்வாறாயினும் இன்று, இலங்கையில் ஊடக சுதந்திரமானது தொற்று நோய் போல பரவும் தவறான தகவல்களிற்கு எதிராகபோராடும் போது ஏற்படும் மிரட்டல், தணிக்கை, சர்வாதிகாரபிரச்சாரம், உடலியல் மற்றும் இணைய துன்புறுத்தல் போன்ற தொன்று தொட்டு காணப்படும் சவால்களிலிருந்து மீள வேண்டும். டிஜிட்டல் மற்றும் வழமையான ஊடகங்களில் காணப்படும் போலியான தகவல்கள் மற்றும் பொய்யான செய்திகள் நாடுபூராகவும் ஊடக சுதந்திரத்தை பாதிக்கின்றது.

நல்ல ஊடகவியல் அல்லது ஒழுக்கரீதியான, தொழில் தகைமையுடனான ஊடகவியல் இன்றைய சூழலில் நாட்டிற்கு தேவையான ஒன்றாகும்.

இலங்கை பத்திரிகை ஸ்தாபனமானது, இலங்கை பத்திரிகை வெளியீட்டாளர் சங்கம், இலங்கை பத்திரிகை ஆசிரியர் கழகம், சுதந்திர ஊடக இயக்கம் மற்றும் உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம் ஆகியவற்றுடன் இணைந்த நிறுவனமாக காணப்படுகின்றது. “ஊடகங்கள் தமது சுதந்திரத்தினை நிலைநிறுத்தவும் பொதுமக்களிற்கு பொறுப்புக் கூறும் வகையில் செயற்படுவதனை ஊக்கப்படுத்துவதனையும் அதற்கு ஒத்துழைக்கும் வகையில் உதவுவதனையும் நோக்கமாகக் கொண்டது. தொழில்முறையான பயிற்சி மற்றும் கோட்பாடுகளை நிலைநிறுத்துவதன் மூலமும் இலங்கை ஊடகங்களை மேம்படுத்துவதில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் முன்னிலை வகிக்கின்றது.

இலங்கை இதழியல் கல்லூரி (SLCJ) மற்றும் இலங்கை பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழு (PCCSL) ஆகியன இதன் பிரதான பிரிவுகளாக காணப்படுகின்றன. இதழியல் கல்லூரியானது ஊடகவியலாளர்களை உருவாக்குவதோடு இலங்கை பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழு பொதுமக்களிற்கும் ஊடகங்களிற்கும் இடையே மத்தியஸ்தத்தை ஏற்படுத்தும் வகையில் செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.