சமூக ஊடகங்களை முழுமையாக தடைசெய்வேன் – ஜனாதிபதி எச்சரிக்கை

நாட்டில் தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ள சமூக வலைத்தளங்களின் செயற்பாடுகளை வழமைக்கு கொண்டு வர மறுபரிசீலனை செய்து வருவதாக  ஜனாதிபதி தெரிவித்துள்ளதுடன் பொய்யான செய்திகள் பரவுவதை கட்டுப்படுத்த முடியவில்லையென்றால் சமூக வலைத்தளங்களை முழுமையாக தடை செய்து விடுவேன் எனவும் ஜனாதிபதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அவர் மேலும்  உரையாற்றுகையில்,

இன்றைய தினம் சமூக வலைத்தளங்களின் தடையை நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது. எனினும் நேற்றைய தினம் பல பொய்யான தகவல்கள் பகிரப்பட்டிருந்தன.

இலங்கையில் சமூக வலைத்தளங்களை வழமைக்கு கொண்டுவருவது தொடர்பாக  பரீசிலனை செய்து வருகிறோம். சமூக வலைத்தளங்களின் நிர்வாகிகளை இன்றைய தினம் நான் சந்திக்கவுள்ளேன்.

பொய்யான செய்திகள் பரவுவதை கட்டுப்படுத்தவில்லை என்றால் சமூக வலைத்தளங்களை முழுமையாக தடை செய்து விடுவேன் என ஜனாதிபதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இன்று காலை ஊடகங்களின் பிரதானிகள் மற்றும் ஊடக ஆசிரியர்களை சந்தித்து உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

கடந்த 21 ஆம் திகதி நாட்டில் இடம்பெற்ற தற்கொலை குண்டு வெடிப்பு சம்பவங்களையடுத்து நாட்டின் பாதுகாப்பிற்காக பேஸ்புக், வட்ஸ்அப் ,வைபர் மற்றும் யூடியூப் போன்ற சமூக வலைத்தளங்களின் பாவனை தடைசெய்யப்பட்டு இன்றுடன்  6  நாட்கள் கடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.