மாணவர்களின் பாதுகாப்பு கருதி விசேட நடவடிக்கை

பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக விசேட நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக, கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி, தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பலப்படுத்துமாறு கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் கோரிக்கை விடுத்துள்ளதாக, அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, பாடசாலை வளாக பாதுகாப்பில் விசேட கவனம் செலுத்துமாறும கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அனைத்துப் பாடசாலைகளும் எதிர்வரும் 29ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், அதற்கு முன்னர் பாடசாலைகளில் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக குறித்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

இதேவேளை, பாடசாலை மாணவர்கள் பயணிக்கும் வாகனங்கள் தொடர்பிலும் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.