அவசர நிலையில் இன்று பாராளுமன்றம் கூடுகின்றது.

பாராளுமன்றம் இன்று (23ஆம் திகதி) பிற்பகல் 01 மணிக்கு கூடவுள்ளது.

இதன்படி, பிற்பகல் 01 மணி முதல் 02 மணி வரை பாராளுமன்ற அமர்வு இடம்பெறவுள்ளது.

இதன்போது, பிரதமர் மற்றும் எதிர்கட்சித் தலைவர் ஆகியோர் நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் விசேட உரைநிகழ்த்தவுள்ளனர்.

அவசரகால சட்டம் குறித்த விதிமுறைகள் தொடர்பில் வௌியிடப்பட்டுள்ள வர்த்தமானி இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதுடன், நாளை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாக, சபாநாயகரின் ஊடகப்பிரிவு வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நாட்டின் தற்போதைய நிலைமையை கருத்தில்கொண்டு எதிர்வரும் 26 ஆம் திகதி மாலை 03 மணிக்கு அனைத்து மத மற்றும் அரசியல் தலைவர்கள் பங்கேற்கும் சர்வமத கூட்டமொன்றுக்கு அழைப்பு விடுப்பதற்கு நேற்று நடைபெற்ற கட்சித்தலைவர்களின் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.