அம்பாறை கரையோரப்பிரதேசத்தில் கறுப்புவெள்ளைக்கொடிகள்! கடைகள்பூட்டு:சந்தைகள் வெறிச்சோடின

அம்பாறை கரையோரப்பிரதேசத்தில் (22) கறுப்புவெள்ளைக் கொடிகள் பரவலாக கட்டப்பட்டு துக்கம் அனுஸ்ட்டிக்கப்பட்டது.
பெரும்பாலான கடைகள் பூட்டப்பட்டுக்கிடந்தன. வர்த்தகர்சங்கங்கள் ஒலிபெருக்கிவாயிலாக விடுத்து வேண்டுகோளையேற்று கடைகள் இழுத்துமூடப்பட்டன.
இரவுவேளையில் ஊரடங்குச்சட்டம் அமுலில் இருந்தகாரணத்தினால் மலையகம் தம்புள்ள உள்ளிட்ட இடங்களிலிருந்து வரும் மரக்கறி லொறிகள் கல்முனைக்கு வந்துசேரவில்லைஅதனால் சந்தை வெறிச்சோடிக்காணப்பட்டன.
அதைவிட அனுதாபத்திற்காக சந்தைத்தொகுதி மூடப்பட்டன.
பத்திரிகைகளுக்கு பெரும்கிராக்கி!
காலையில் கொழும்பு பத்திரிகைகள் வந்துசேர்ந்தன. பத்திரிகைகளுக்கு பெரும்கிராக்கி ஏற்பட்டது. மக்கள் முண்டியடித்துக்கொண்டு பத்திரிகைளை வாங்கமுற்பட்டனர். பெரும்பாலானோர்ஏமாந்துசென்றனர்.
மக்கள்மத்தியில் பயம்பீதி.!
இன்னமும் மக்கள் மத்தியில் பயம்பீதி குடிகொண்டிருக்கிறது. அனைவரது வாயிலும் தாக்குதல்சம்பவத்துடன் தொடர்புபட்ட அனுதாபக் கதைகளே பேசப்படுகின்றன.
மட்டக்களப்பில் மரணித்த மற்றும் காணமடைந்த உற்றார் உறவினர் வீடுகளுக்கு மக்கள் செல்வதையும் காணமுடிந்தது.
அரசஅலுவலகங்களில் அலுவலர்கள் குறைவாகக்காணப்பட்டனர்.
தேவாலயங்களுக்கு பாதுகாப்பு!
அம்பாறை மாவட்டம் பூராக கிறிஸ்தவ தேவாலங்களுக்கு இராணுவம் பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதைவிட பொலிசாரின் ரோந்தும் இடம்பெற்றது.
கேந்திரமுக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் விசேடஅதிரடிப்படையினர் நிறுத்திவைக்கப்பட்டுள்ளனர்.
எனினும் ஆலயங்களுக்கு பள்ளிவாசல்களுக்கோ பாதுகாப்பு வழங்கப்படவில்லை.
 காரைதீவில் ஆத்மார்த்த அஞ்சலி!
காரைதீவு பிரதேசசபையின் ஏற்பாட்டில் (23) குண்டுத்தாக்குதலில் பலியானோருக்கு ஆத்மார்த்த அஞ்சலி நிகழ்வு தவிசாளர் கி.ஜெயசிறில் தலைமையில் நடைபெறவுள்ளது.
சர்வசமயத்தலைவர்கள் பிரதேசசபை உறுப்பினர்கள் ஆலயத்தலைவர்கள் பொதுமக்கள் கலந்துகொள்ளும் இந்த நிகழ்லு காலை 9மணியளவில் காரைதீவு விபுலாநந்த கலாசார மண்டபத்தில் நடைபறெவுள்ளது.