மண்முனை தென்மேற்கு பிரதேசத்திலும் வெள்ளைக்கொடி

மட்டக்களப்பு, கொழும்பு போன்ற பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட தீவிரவாத தாக்குதலினால் கொல்லப்பட்ட உறவுகளின் ஆத்மா சாந்தி வேண்டி மண்முனை தென்மேற்கு பிரதேசத்திலும், பதாதை மற்றும் வெள்ளை, கறுப்புக்கொடி பறக்கவிடப்பட்டுள்ளது.

அம்பிளாந்துறை சந்தியில் தங்கச்சகோதரர்கள் அமைப்பினால் அஞ்சலி செலுத்தப்பட்டமையுடன், முனைக்காடு மற்றும் பிரதேசத்தின் சந்திகளிலும் வெள்ளைக்கொடிகள் தொங்கவிடப்பட்டுள்ளன.

மேலும், இன்றையதினம் வழமையையும் விட போக்குவரத்துக்கள் குறைவாக காணப்பட்டமையுடன், மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பல்வேறு வர்த்தகநிலையங்களும் பூட்டுப்பட்டு, வெள்ளைக்கொடிகளும் பறக்கவிடப்பட்டுள்ளன.