நீரில் விசம் கலக்கப்பட்டதா ? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி

நீரில் விசம் கலக்கப்பட்டுள்ளதாக வெளியிடப்பட்ட செய்திகளில் எந்தவித உண்மையும் இல்லை என பொலிஸார் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

 

இதேவேளை தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையினூடாக விநியோகிக்கப்படுகின்ற நீர் சர்வதேச தரத்துடன் உள்ளதாகவும், தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தொடர்ந்தும் அதன் தன்மை தொடர்பில் ஆராய்ந்து வருவதாக சபை தெரிவித்துள்ளது.

அத்துடன் நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையினூடாக விநியோகிக்கப்படுகின்ற நீரை பருகுவதில் எவ்வித அச்சம் கொள்ளத் தேவையில்லை எனவும் நீர் வழங்கல் வடிகாமைப்புச் சபை சுட்டிக்காட்டியுள்ளது.

இன்று காலை முதல் கொழும்பின் பல பகுதிகளுக்கும் விநியோகிக்கப்பட்ட நீரில் விசம் கலக்கப்பட்டுள்ளதாக பல்வேறு வதந்திகள் பரவியிருந்தமை குறிப்பிடத்தக்கது.