போக்குவரத்துச் சேவைகள் வழமைக்குத் திரும்பும்

நேற்றைய தினம் மடடுப்படுத்தப்பட்;ட இலங்கை போக்குவரத்துச் சபையின் பஸ் சேவைகள் ,இன்று காலை 6.00 மணி முதல் மீண்டும் ஆரம்பிக்கும் என்று தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

நாடளாவிய ரீதியில் அனைத்துப் பிரதேசங்களுக்கும் பயணிக்கக்கூடிய வகையில் பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்படும் என்று இலங்கை போக்குவரத்துச் சபையின் பிரதிப் பொது முகாமையாளர் பி.எச்.ஆர்.ரி.சந்திரசிறி தெரிவித்தார்.

இதேபோன்று இன்று காலை 6.00 மணி முதல் ரெயில் சேவைகளும் வழமை போன்று இடம்பெறும் என்று ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.