விமான நிலையங்களின் பாதுகாப்பு, விமானப்படையின் வசம்

சந்தேகத்திற்கிடமான  தகவல்கள் ஏதும் தம் வசமிருப்பின் 011 2323015 என்ற அவசர தொலைபேசி இலக்கத்துக்கு துரித தகவல்களை வழங்க முடியும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, குறித்த தாக்குதல்கள் நடத்தப்பட்டமைக்கான காரணம் தொடர்பில் நாளைய அளவில் பெரும்பாலும் தகவல்களை வழங்க எதிர்பார்ப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

மறு அறிவித்தல் வரை சகல அரச பல்கலைக்கழகங்களும் மூடப்பட்டுள்ளதுடன், கல்வியியல் கல்லூரிகளின் பரீட்சைகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

இதுவரை 08 குண்டுத் தாக்குதல்கள் பதிவாகியுள்ளதுடன் அவற்றில் மூன்று கிறிஸ்தவ ஆலயங்களை இலக்கு வைத்தும் மேலும் 3 தாக்குதல்கள் பிரபல ஹோட்டல்களை இலக்கு வைத்தும் நடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதேநேரம், பண்டாரநாயக்க மற்றும் மத்தளை விமான நிலையங்களின் பாதுகாப்பு, விமானப்படையின் வசம் வழங்கப்பட்டுள்ளது என விமானப்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.