நாட்டில் விசேட பாதுகாப்பு

நாட்டில் இன்று காலை சில இடங்களில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்களை அடுத்து விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது

இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தப்பத்து இதுதொடாபாக தெரிவிக்கையில் பாதகாப்பு நடவடிக்கைகளில் முப்படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். விசேட பாதுகாப்பு இடம்பெற வேண்டிய பகுதிகளில் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளனர் என்று கூறினார்;.

பொலிசாரும் பாதுகாப்புப் பிரிவினரும் சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இதற்கான உறுதி செய்யப்பட்ட தகவல்களை பொதுமக்கள் விரைவாக வழங்குமாறு அரசாங்கம் தெரிவித்துள்ளது.

 

இந்தச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு சில சமூக இணையத் தளங்களிலும் ஏனைய சிலவற்றிலும் வேண்டத்தகாத உண்மைக்குப் புறம்பான பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இவற்றில் ஏமாந்துவிட வேண்டாமென்றும் அமைதியான முறையில் செயற்படுமாறு அரச தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதேவேளை பாதுகாப்புச் சபையின் அவசர கூட்டமொன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் இடம்பெற்ற இடங்களில் தேவையற்ற வகையில் ஒன்றுதிரள்வதை தவிர்க்குமாறு பொதுமக்கள் கேட்கப்பட்டுள்ளனர். இவ்வாறு ஒன்றுகூடுவதன் மூலம் பாதுகாப்பிற்கும் விசாரணைகளுக்கும் தடையாக அமையும் என்று பொலிசார் தெரிவித்துள்ளனர்.