வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பில் 7 பேர் கைது

நாட்டில் இன்று இடம்பெற்ற 8 குண்டு வெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் இதுவரை 7 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்தன தெரிவித்துள்ளார்.

 

அத்துடன் இதுவரை இந்த வெடிப்புச் சம்பவங்களில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 190 ஆக உயர்வடைந்துள்ளதுடன், உயிரிழந்தோரின் சடலங்களை மீட்கும் நடவடிக்கையில் படையினர் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.