வெடி பொருட்களைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்டோர் கைது

திருகோணமலை – செம்மாலை கடற்பிரதேசத்தில் கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்ட கண்காணிப்பு நடவடிக்கையின் போது வெடி பொருட்களைப் பயன்படுத்தி சட்ட விரோத மீன் பிடியில் ஈடுபட்ட சந்தேகநபர்கள் மூவர் நேற்று  கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

கைது செய்யப்பட்டுள்ளவர்கள் 27 மற்றும் 29  வயதுடய புல்மோட்டை பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

 

 

இவர்களிடமிருந்து மீன் பிடிப்பதற்கு பயன்படுத்தப்பட்ட படகு உள்ளிட்ட மீன்பிடி உபரகரணங்கள் கைப்பற்றப்பட்டு முல்லைத்தீவு கடல்வள பாதுகாப்பு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.