ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள் உயிரிழப்பு

பொத்துவில் கடற்பரப்பில் நிகழ்ந்த படகு விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர்.

 

தெமட்டகொட பகுதியிலிருந்து சுற்றுலா சென்றவர்கள் பொத்துவில் கொட்டுகல் களப்பில் படகில் சென்ற போதே குறித்த விபத்து சம்பவித்துள்ளது.

இந்நிலையில் குறித்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 மற்றும் 16 வயதுடைய சகோதரர்கள் இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இதனையடுத்து குறித்த சம்பவம் தொடர்பில் மேதிக விசாரணைகளை பொத்துவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது