வரலாற்றுசிறப்புமிகு கொக்கட்டிச்சோலை, தாந்தாமலை ஆலயங்களில் விசேட பூசை

பிறந்திருக்கின்ற விகாரி வருடத்தினைச் சிறப்பித்து வரலாற்று சிறப்புமிகு கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயத்திலும், தாந்தாமலை ஸ்ரீ முருகன் ஆலயத்திலும் இன்று(14) ஞாயிற்றுக்கிழமை விசேட பூசை வழிபாடுகள் நடைபெற்றன.

கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் சிவஸ்ரீ மு.கு.சச்சிதானந்தக்குருக்கள், சிவஸ்ரீ.வ.சோதிலிங்க குருக்களும் இணைந்து பூசை ஆராதனைகளை மேற்கொண்டமையுடன், தாந்தாமலை ஸ்ரீ முருகன் ஆலயத்தில் சிவஸ்ரீ.பு.நவருபன் குருக்கள் தலைமையில் பூசை வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டன.

இப்பூசை வழிபாடுகளை கண்டுகளிப்பதற்காக பல நூற்றுக்கணக்கான அடியார்களும் ஆலயத்திற்கு வருகைதந்திருந்தனர்.