மீண்டும் மண்முனை பாலத்தின் அருகில் வரவேற்பு பதாதை.

மண்முனை தென்மேற்கு பிரதேச சபை எல்லைக்குட்பட்ட மண்முனைப் பாலத்தின் அருகில் சிவபூமி அன்புடன் வரவேற்கின்றது என்ற வரவேற்பு பதாதை மீண்டும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

மண்முனை பாலம் அமைக்கப்பட்டு, மக்கள் பாவனைக்காக திறந்துவிடப்பட்டதன் பின்பு, குறிப்பாக 2014ம் ஆண்டு மண்முனை பாலத்தின் அருகில் படுவான்கரை பெரும்நிலத்தின் பாரம்பரிய சிவபூமி அன்புடன் வரவேற்கின்றது என்ற பதாதையை பட்டிப்பளைப் பிரதேச இந்து ஆலயங்களின் ஒன்றியம், கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலய பரிபாலனசபை இணைந்து நட்டனர்.

குறித்த பதாதை சேதமடைந்ததினால் நீண்ட நாட்களாக குறித்த பகுதியில் வரவேற்பு பதாதை இல்லாமல் காணப்பட்ட நிலையில், மீண்டும் படுவான்கரைப்பகுதி இளைஞர்களின் முயற்சியுடன் சிவபூமி உங்களை அன்புடன் வரவேற்கின்றது என்ற பதாதை மீண்டும் நடப்பட்டுள்ளது.
படுவான்கரைப்பகுதி வரலாற்று சிறப்புமிகு பல ஆலயங்களை கொண்டமைந்த பெரும்பகுதி என்பதும் குறிப்பிடத்தக்கது.

2014ல் நடப்பட்ட பதாதை
தற்போதைய பதாதை