உலகிலுள்ள அனைவருக்கும் இலங்கைத்தமிழ்தான் பிடிக்கும்! தென்னிந்திய இலக்கிய விற்பன்னர் வித்யாசாகர் கூறுகிறார்.

 
.உலகமெலாம் கூடி 12 1/2 கோடி மக்களை இணைக்கின்றது தமிழ்மொழி.
.குவைத்தில் மட்டும் ஏறத்தாழ 33 தமிழிலக்கிய மன்றங்கள் உள்ளன.
.ஈழத்து விடுதலைக்கு போராடியவர்களை மறக்கமுடியாது.
.கைதட்டினால் ஆயள் நீடிக்கும் இதயம் நன்றாக இயங்கும்.
.தமிழைவளர்ப்பதில் ஒவ்வொரு தமிழனுக்கும் பங்குண்டு.

 
உலகின் மூத்தமொழி எமது செந்தமிழ். அந்தத்தேன் சிந்தும் தமிழை பலரும்
பருகுகின்றனர். பேசுகின்றனர். எல்லாப்பலகாரங்களும் இனிக்கும் ஆனால்   சுவை
வேறு வேறாகவிருக்கும். அதுபோல் உலகிலுள்ள அனைவருக்கும் இலங்கையில் பேசப்படும்
தமிழே பிடிக்கும். இது இலங்கைத்திருநாட்டிற்குப் பெருமை.
 
இவ்வாறு இந்தியாவின் குறிப்பாக தென்னிந்தியாவின் இலக்கிய விற்பன்னர்
கவிஞர் வித்யாசாகர் தெரிவித்தார்.
 
பாடலாசிரியராக நாவலாசிரியராக சிறுகதை எழுத்தாளராக சிறந்த கவிஞராக உலகம்பூராக
வலம்வரும் வித்யாசாகர்  சனிக்கிழமை சம்மாந்துறைக்கு
வருகைதந்திருந்தார்.
 
சம்மாந்துறை தமிழா ஊடகவலையமைப்பு சம்மாந்துறை அப்துல்மஜீத் மண்டபத்தில்
ஏற்பாடுசெய்திருந்த சர்வதேச மகளிர்தினக் கவியரங்கிற்கு தலைமைதாங்க
வந்திருந்தார். அங்கே அவருக்கு “கவி வேந்தர்” விருது கொடுத்து கவுரவிக்கப்பட்டது।
 
அவருடன் கண்ட செவ்வியை எமது வாசகர்களுக்காகத் தருகிறேன்.
 
கேள்வி: தங்கள் குடும்பம் பற்றிமுதலில் சுருக்கமாகக்கூறுங்கள்?
தில்: நான் சென்னையில் புதுச்சேரியில் கோவிந்தன் கெம்பீஸ்வரி தம்பதியினருக்கு பிறந்தேன்।
திருமணம் செய்ததன்பலனாக மூன்று குழந்தைகளுள்ளனர்। மனைவி செல்லம்மாள் ।  தற்போது குவைத்தில்
வசித்துவருகிறேன்। தமிழிலக்கியத்தின்பாலுள்ளஈடுபாடு காரணமாக உலகை
வலம்வருகிறேன்।
 
கேள்வி: உங்கள் தொழில் என்ன?
 
பதில்: நான்ஒரு இயந்திரவியல் பொறியியலாளர் மற்றும் தரமேலாண்மைத் துறையின் சர்வதேச தலைமை தணிக்கையாளர்। குவைத்தில் எண்ணெய் வாயுசர் நிறுவனத்தில் மேலாளராகப் பணியாற்றுகிறேன்।
 
கேள்வி: பொறியியலாளரான தங்களுக்கு தமிழில் குறிப்பாக தமிழிலக்கியத்தில்
ஈடுபாடுவரக்காரணம் என்ன?
 
பதில்: ஒவ்வொரு தமிழனுக்கும் தமிழ்ப்பற்று மண்பற்று கட்டாயம் இருக்கவேண்டும்।
அரசியல் பிரதேச இனமத வேறுபாடுகளுக்கு அப்பால் தமிழில் கட்டாயம்
ஆர்வமிருக்கவேண்டும்। இஸ்லாமியத்தமிழர்களையும் சேர்த்தே சொல்கிறேன்।அவர்களும்
தமிழை வளர்ப்பவர்கள்। தமிழுக்கென இஸ்லாமியர் ஆற்றும் பங்கு அளப்பரியது
 
கேள்வி: இதுவரை வந்த இலக்கியப்படைப்புகள் பற்றிக்கூறமுடியுமா?
 
பதில்: இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட கவிதைகளை யாத்திருக்கிறேன்।
பலவற்றை இலக்கியப் புத்தகங்களாக வெளியிட்டிருக்கிறேன்। பல நாவல்கள் குறுநாவல்கள் போன்ற எண்ணற்ற கதைகள் வெளிவந்துள்ளன।கனவுத்தொட்டில் போன்ற நாவல்கள் உலகளாவியரீதியில் வரவேற்பைப்பெற்றவை। 60க்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதி வெளியிட்டிருக்கிறேன்। பல கட்டுரைத்தொகுப்புகள் நமது இளைய சமுதாயத்தை மனதில் கொண்டு எழுதப்பட்டவை।  உதாரணமாக வாழ்வைச்செதுக்கும் ஒரு நிமிடம் என்ற தலைப்பிலான கட்டுரைடத்தொகுப்பு எதிர்காலத்தில் ஆங்கிலம் மற்றும் பிற மொழிகளில் மொழிபெயர்க்கப்படும் என்பது திண்ணம்। 
 
பறக்க ஒரு சிறகு கொடு, சில்லறை சப்தங்கள், விடுதலையின் சப்தம் போன்ற கவிதைத் தொகுப்பு நூல்களையும் ஓட்டைக்குடிசை எனும் சிறு கதைத் தொகுப்பு மற்றும் கொழும்பு வழியே ஒரு பயணம் எனும் ஈழத்து தமிழர் வரலாற்று நாவல் போன்ற நூல்கள் முன்பே வெளியிடப்பட்டவை என்றாலும் அவைகளை இங்கே இம்மண்ணிற்கு அறிமுகம் செய்துவைக்க விருக்கிறேன்।
 
சென்ற வாரம் மலேசியப் பல்கலைக்கழகத்தில் “வாழ்வைத் செதுக்கும் ஒருநிமிடம்” எனும் தொகுப்பு வெளியிடப் பட்டது।அதைத் தொடர்ந்து சம்மாந்துறையில் மிகச் சிறப்பாக “தமிழா ஊடக வலையமைனரால் நிகழ்த்தப்பட்ட கவியரங்கு நிகழ்ச்சியில் “திரைமொழி” எனும் நூலை இங்கும் வெளியிட்டிருக்கிறேன்। சினிமா தொடர்பான பல சுவாரசிய விடயங்களும் வாழ்வியல் கூறுகளும் பல அதில் பொதிந்துள்ளன। 
 
2010-ஆம் ஆண்டில் முதன்முதலாக பிறந்தநாள் பாடலை இசைவடிவாக்கி நமது உலக தமிழர் பயன்படுத்தும் வண்ணம் முகில் படைப்பாக்கம் வழியே வெளியிட்டோம்।  அது ஈழத்தமிழ் மக்களால் இன்றும் உலகலாவி பிரபலமாக கொண்டாடப்பட்டு பிறந்தநாளின் பொது ஒளிபரப்பப்பட்டு வருகிறது। அதேபோல இன்னும் பல சிறுவர் இலக்கிய பாடல்களை யூடியூபில் வெளியிட்டுள்ளோம்। அவைகளையெல்லாம் முகில் படைப்பகம் அல்லது Mukil Creations எனும் யூடியூப் பக்கத்தில் சென்று எல்லோருமே பார்க்கலாம்।
 
கேள்வி: கலையைப்பற்றி என்ன கருதுகிறீர்கள்?
 
பதில்: கலை ஒரு பொழுதுபோக்கு அம்சம் அல்ல। பொதுவாக தமிழ்பேசும் மக்களின்  கலைகள் பொழுதை ஆக்கக்கூடியது। கலைகளின் வழியே தான் நாம் நமது விடுதலை உணர்வையும் வாழ்வியலின் சிறப்பம்சங்களையும் எண்ணங்களின் பல அழகு தோற்றங்களையும் வரலாறாகவும்  
விளையாட்டாகவும் பாதுகாத்து கதைகளினூடாகவும் பாடல்களின் ஊடாகவும் வைத்திருக்கிறோம்। உறக்கச் சொன்னால் கலையால்தான் பொழுதுபோகின்றது எனலாம்। எந்த ஒரு களையும் நமது பொழுதுகளை ஆக்கக்கூடியது, போக்கக்கூடியது இல்லை।
 
கேள்வி: தங்களின் இலக்கியப்பணிக்குகிடைத்த பட்டங்கள் விருதுகள்
பற்றிக்கூறமுடியுமா?
 
பதில்: எண்ணற்றவை உண்டு। அவைகளைக் கடந்து எல்லோரின் அன்பிற்குரிய ஒற்றை வித்யாசகராக இருக்கவே நான் விரும்புகிறேன்। என்றாலும் இதுவரை, நிறையப்பட்டங்கள் விருதுகள் உலகின் பலபாகங்களிலிருந்தும் கிடைத்துள்ளன। குறிப்பாக, தமிழித்தென்றல், பன்னூல் பாவலர், தமிழ்ப் படைப்பிலக்கியச் செம்மல், கவிமாமணி, தமிழ்மாமணி, எழுத்தோவியச் சித்தர்,  வெண்மணச் செம்மல், தலைசிறந்த பொறியாளன் மற்றும் தற்போது கவியரங்கில் தமிழா ஊடக வலையமைப்பினரால் சம்மாந்துறையில் தரப்பட்ட கவி வேந்தர் போன்றவைகளைச் சொல்லலாம்। *
 
கேள்வி: தமிழ்நாட்டிற்கும் இலங்கைக்கும் இடையே தமிழ்வளர்ச்சியிலுள்ள வேறுபாடு
பற்றிக்கூறுங்கள்?
 
பதில்: சென்னை உலகத்தமிழர்கள் சங்கமிக்கின்ற இடம்। தமிழர்கள் பலவாறு பல இடங்களிலிருந்து வந்து சந்திக்கின்ற இடம்। அங்கு தமிழ்வளர்ச்சியைப்பற்றிப் பெரிதாக அலட்டிக்கொள்வதில்லை। அங்கு அநேகர் அதற்காகஉள்ளனர்। ஆதலால் அது அங்கே இயல்பாக நடக்கிறது என்பதால் அங்கிருக்கும் எங்களுக்கு மொழி வளர்ச்சி என்பது பெரிதாகத் தெரிவதில்லை। நிழலின்அருமை வெயிலில் தெரியும் என்பதற்கிணங்க அங்கிருந்து வெளியேறினால் அதன் வித்தியாசம் நன்கு உணரலாம்।  என்றாலும், உலகலாவியுள்ள அணைத்து தமிழர்களும் நமது தமிழ் வளர்ச்சியின் நன்றிக்கு உரியவர்கள் என்பது மிக முக்கியமானது।
இன்றும், உலகநாடுகளிலுள்ள பன்னிரண்டரைக்கோடித் தமிழர்கள் தமது பண்பாடு இன மொழி அக்கறை அதோடு நமது பாரம்பரியங்களையும் மறக்காமல் பாதுகாத்து வருகிறார்கள்। அதோடு தமது மண்ணையும் தமிழையும் இலக்கியத்தையும் அவர்களின் பல வேலைகளுக்கு மத்தியிலும்
வளர்த்துவருகிறார்கள் என்பது நாடறிந்த ஒன்றாகும்।*  
 
கேள்வி: உலகில் எங்கெல்லாம் சென்றிருக்கிறீர்கள்?
 
பதில்: பல நாடுகளுக்குச் சென்றிருக்கிறேன்। குறிப்பாக ஒரு பக்கம் இலக்கியமும், மறுபக்கம் தர மேலாண்மை துறையில் சர்வதேச தலைமை தணிக்கையாளன் என்பதாலும் உலகம் சுற்றுவதில் குறைவில்லை। குறிப்பாக, லண்டன் பிரான்ஸ் டென்மார்க் ஜேர்மனி மலேசியா சிங்கப்பூர் ஜப்பான் இந்தோனேசியா கொரியா மற்றும் அமெரிக்கா போன்ற பல நாடுகளில் தொடர்ந்து இலக்கிய பணிகளை நமது பாரம்பரிய கலைகளை முன்னெடுத்து பிரம்மாண்டமான விழாக்களை எடுத்து நமது தமிழுக்கு பெருமை செய்கின்றனர்। நானும் அதோடு இணைந்து என்னால் இயன்றளவு பலவித இலக்கிய செயற்பாடுகளை முன்னெடுக்கிறேன், குறிப்பாக கவியரங்க நிகழ்வுகளை தொடர்ந்து ஆற்றி வருகிறேன்। இன்னும் பல நாடுகளில் கவியரங்களை நிகழ்த்தி, நல்ல சிந்தனைகளை பரப்பி மனிதர்களை மேலும் இலக்கியங்களின் வழியே செம்மைப்படுத்தவேண்டும் என்பது எனதெண்ணம்। அத்தகைய சிறப்பொடு உலகநாடுகளில் இன்று பல இடங்களில் தமிழிலக்கியமன்றங்கள் வைத்து அத்தனை சிறப்பாக  செய்றபடுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது।
 
கேள்வி: மத்திய கிழக்கு நாடுகளிலுமா?
 
பதில்: ஆம்। கட்டார் துபாய் குவைத் பஹ்ரேன் சவுதி ஓமன் போன்ற பல நாடுகள் தமிழிலக்கிய
மன்றங்கள் வைத்து இலக்கியமுயற்சிகளில் ஈடுபட்டுவருகின்றன। நானிருக்கும்
குவைத்தில் மட்டும் ஏறக்குறைய 33 தமிழிலக்கியமன்றங்கள் உள்ளன।1கோடி மக்களுல்ல
சின்னஞ்சிறியஅழகான நாடு அது।
 
கேள்வி: ஈழத்துப்போர் பற்றி அறிந்திருப்பீர்கள்। அதுபற்றி இலக்கியம் ஏதாவது
செய்துள்ளீர்களா?
 
பதில்: விடுதலைக்காக தன்னை ஈகம்செய்தவர்களை யாரும் மறக்கக்கூடாது। அவர்கள்
பிறருக்காக இரத்தம் சிந்திய மறவர்கள்। மண்ணின் விடுதலை நோக்கோடு உயிர்விட்டவர்களை எடைதூக்கி சீர் காணல் அறமன்று। அவர்களுக்க பல பாடல்களை ஆக்கியுள்ளேன்। கவிதை தொகுப்புகள், கொழும்பு வழியே ஒரு பயணம் என எண்ணற்றவை உண்டு।
 
கேள்வி: இறுதியாக ஈழத்து தமிழிலக்கிய படைப்பாளிகளுக்கு என்ன சொல்ல
விளைகிறீர்கள்?
 
பதில்: ஈழத்தில் பல இலக்கியமுயற்சிகள் நடந்தேறிவருகின்றன। இங்குகூட பாவலர்
ஈழமேகம் பாக்கீர்த்தம்பி அவர்களின் நினைவரங்கில் தமிழா ஊடகவலையமைப்பு கவியரங்கை நடாத்துகிறது। கவிஞர்கள் பாகுபாடன்றி கலந்து சிறப்பித்தார்கள்। இஸ்லாமியர்கள் வேறு தமிழர்கள்வேறு அல்ல । மொழியால் இணைந்த இனம் இது। இதை என்றும் நாம் விட்டகலைக்கூடாது। காரணம், நமது ஒற்றுமை தான் நமது பலம்। அவ்வாறு நாம் உலகளவில்  தமிழிபேசும் அனைவரும் மொழிவழியே ஒன்றுகூடி இணக்கமாக வாழ்ந்துவிட்டால்; இவ்வுலகை மிக உயர்ந்த அறத்தினோடு அரவணைப்போடு பாதுகாத்திட நம்மால் இயலும்।
 
எனவே அவர்கள் இணைந்து பலஇலக்கியமுயற்சிகளை மேற்கொள்ளும்போது மதஇன நல்லிணக்கம் தானாகஉருவாகும்। இலக்கியம் நமக்குள் ஏக நல்லுணர்வுகளை ஏற்படுத்தி பண்புகளை வளர்த்து நமது மரபுமாறாத வாழ்வியலை வரலாறாக்கி எதிர்காலத்திற்கு வைத்துக்கொள்ளுமாறு சிறப்பம்சமாகும்। முதலாம் கடந்து, ஈழத்தில் மிகே நேர்த்தியான படைப்பாளிகள் உள்ளனர்। தமிழ்பேசும் மக்கள் நமது கலைகளை இலக்கியங்களை தக்கவைத்துக்கொள்ள தொடர்ந்து பாடுபடுகின்றனர்। எனவே ஈழத்துபடைப்பாளிகள் வெளியே உலகிற்கு வரவேண்டும்।
 
கேள்வி; அதற்காக தாங்கள் ஏதாவது முயற்சி எடுப்பீர்களா?
 
பதில்: ஆம் எனது முகில் பதிப்பகம் வழியே வெளிவரும் பல படைப்புகளை இங்கே ஈழத்தில் வெளியிட்டு அதன் மூலம் வரும் நிதிகளை திரட்டி இங்குள்ள மாணவ சமுதாயத்திற்கு உதவும் வகையில்பல பள்ளிக்கூடங்களுக்கு சீரமைப்பு நூலகம் போன்ற நற்பணிகளுக்கு பயன்படுத்தி, அதோடு நில்லாமல் பல கவியரங்குகளை இங்கு நடத்தி, எதிர்காலத்தில் எனது கவியரங்கில் பாடிய  கவிஞர்களை வைத்து உலகளாவியரீதியில்
பங்கேற்ற திறமையான கவிஞர்களை இணைத்து விரைவில் பன்னாட்டு கவிஞர்களின்
கவியரங்கொன்றை செய்யவிருக்கிறேன்। இன்று இங்குபாடுவோருக்கும் நாளை அங்கே அந்த
வாய்ப்புக்கிடைக்கும்।
 
கேள்வி: இறுதியாக ஈழத்து படைப்பாளிகளுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள?
 
பதில்: ஒருகாலத்தில் ஒன்றாகவிருந்த தமிழ்நாட்டையும் ஈழத்தையும் கடற்கோள்
பிரித்ததாகக்கூறுவர்। எது எதைப்பிரித்தாலும் எமது பாரம்பரிய தொப்பூழ்கொடி உறவை
யாராலும்பிரிக்கமுடியாது। அதுபோன்று தமிழால் என்றும் நாம் இணைந்திருப்போம்। வாழ்வை நமது ஒற்றுமைத் தன்மையால் செழுமை செய்வோம்। இன்னும் பல இலக்கியங்களை இணைந்து உலகின் ஒரே தமிழ்பேசும் மக்களாக நின்று எம் மண்ணிற்கு படைப்போம்। எமது உறவு இன்னும் இலக்கியதால் நமது அன்புநிறை ஒற்றுமையால் இறுக்கமாகும்। அது நமக்கு உலக அரங்குமுன் பெரும்பலத்தைச் சேர்க்கும்.
 
செவ்விகண்டவர்।  விபுலமாமணி வி।ரி।சகாதேவராஜா காரைதீவு   நிருபர்