5நாள் முயற்சி : மட்டு.மாவட்டத்தில் 1304 செயற்றிட்டங்கள் முன்னெடுப்பு – வெற்றி என்கிறார் அரச அதிபர்.

1304 செயற்றிட்டங்களை நிறைவேற்றி “நாட்டிற்காக ஒன்றிணைவோம்” திட்டம் 5 நாட்களில் வெற்றி என்கிறார் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நாட்டிற்காக ஒன்றிணைவோம் செயற்றிட்டத்தின் இறுதி நாள் நிகழ்வு இன்று(12) வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு மாவட்ட வெபர் மைதானத்தில் நடைபெற்ற போது, 5நாள் செயற்றிட்டம் தொடர்பில் விளக்குகையிலேயே இதனைக் குறிப்பட்டார்.

மாவட்ட அரசாங்க அதிபர் தொடர்ந்தும் கூறுகையில்,

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 14பிரதேச செயலாளர் பிரிவுகளிலும், பல்வேறு செயற்றிட்டங்கள் கடந்த 8ம் திகதி தொடக்கம் 12ம் திகதி வரை முன்னெடுக்கப்பட்டன. குறிப்பாக 1304 செயற்றிட்டங்கள் குறித்த காலப்பகுதிக்குள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமையுடன் இதன்மூலம் 330,942மக்கள் நன்மை அடைந்துள்ளனர். இதற்காக 200மில்லியனுக்கும் அதிகமான நிதி செலவிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி செயலகத்தின் கீழ் 201செயற்றிட்டங்களும், அமைச்சுக்களின் ஊடாக 442 செயற்றிட்டங்களும், கிழக்கு மாகாண சபையின் ஊடாக 224 செயற்றிட்டங்களுமாக மொத்தம் 1304செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. என்றார்.