மட்டு.கிரானில் 300 சாராய போத்தல்களுடன் ஒருவர் கைது

தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு, மட்டக்களப்பு கிரான் பிரதேசத்தில், மதுவரி திணைக்கள அதிகாரிகள் நடத்திய திடீர் சுற்றி வளைப்பில், அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த, 300 போத்தல் சாராயம் கைப்பற்றப்பட்டுள்ளதாக, மாவட்ட மதுவரி திணைக்கள பொறுப்பதிகாரி எஸ்.தயாளேஸ்வரகுமார் தெரிவித்தார்.

கிரான் பிரதேச செயலகப்பிரிவிலுள்ள வீடொன்றை, நேற்று(11) மாலை சுற்றிவளைதத்தபோது, 180 மில்லிலீற்றர் கொள்ளவு கொண்ட 300 சாராய போத்தல்களை, மதுவரி அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

50 போத்தல்கள் கொண்ட, 6 பெரிய பெட்டிகளில் அடைத்து வைக்கட்ட நிலையில் இவை கைப்பற்றப்பட்டதுடன், சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டார்.

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபரை, வாழைச்சேனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.