புதுவருடத்தில் பாரிய அரசியல் மாற்றம்- ஆரம்பித்து வைப்பார் சிறிசேன

புதுவருடப்பிறப்பினை தொடர்ந்து இலங்கையின் அரசியல்வானில் பாரிய மாற்றங்கள் ஏற்படலாம் அரசவட்டாரங்களை மேற்கோள்காட்டி ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மிகமுக்கியமான மாற்றங்கள் ஏற்படலாம் அது தற்போதைய அரசாங்கத்திற்கு பாரிய நெருக்கடியை கொடுக்கலாம் என ஆங்கில ஊடகம் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சர்ச்சைக்குரிய அறிக்கையொன்றை வெளியிடுவார் அத்துடன் சில அரசியல் முடிவுகளையும் வெளியிடுவார் என குறிப்பிட்ட ஆங்கில செய்தித்தாள் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளரை கொலை செய்வதற்கான முயற்சிகள் குறித்த விசாரணைகள் முடிவடைந்ததும் இந்த கொலை சதிச்செய்தி முயற்சி குறித்து சிறிசேன நாட்டு மக்களிற்கு விசேட அறிக்கையை வெளியிடுவார் எனவும் ஆங்கில செய்தித்தாள் தெரிவித்துள்ளது.

முக்கிய பிரமுகர்கள் கொலை தொடர்பான சதி முயற்சி குறித்த விசாரணை இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. முக்கிய பிரமுகர் ஒருவரின் பெயர் இந்த விசாரணைகளில் இடம்பெற்றுள்ளது எனவும் ஆங்கில செய்தித்தாள் தெரிவித்துள்ளது.

 

இலங்கையில் இடம்பெறவுள்ள அரசியல் மாற்றத்தின் ஒரு பகுதியாக மாகந்துரே மதூஸ் உடன் தொடர்புள்ள முக்கிய பிரமுகர்கள் குறித்த விபரங்களும் வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.