சாதாரண தரப் பரீட்சை வினாத்தாள் மீள் திருத்தப் பணிகள் நிறைவு

கடந்த 2018 ஆம் ஆண்டு இடம்பெற்ற கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சை வினாத்தாள்களை மீள் திருத்தும் பணிகள் இன்றுடன் நிறைவடைவதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சையின் பெறுபேறுகள் கடந்த மார்ச் மாதம் 28 ஆம் திகதி வெளியானது.

இந்நிலையில்  மீள் திருத்தங்களுக்காக விண்ணப்பிக்கப்பட்ட பரீட்சார்த்திகளின் விண்ணப்பங்கள் அனைத்தும் அனுப்பி வைக்கப்படுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.