பொலிஸாரின் பலத்த பாதுகாப்போடு சாஞ்சிமலை தோட்ட தொழிலாளர்களுக்கு சம்பள பணம் வழங்கி வைப்பு

(க.கிஷாந்தன்)

நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டிக்கோயா சாஞ்சிமலை தோட்ட தொழிலாளர்களுக்கு மாதாந்த ஊதிய பணமானது 10.04.2019 புதன்கிழமை இரவு 08.30 மணியளவில் பலத்த பொலிஸ் பாதுகாப்போடு வழங்கி வைக்கபட்டதோடு சாஞ்சிமலை தோட்டபகுதியில் அமைதியின்மையும் ஏற்பட்டது.

டிக்கோயா சாஞ்சிமலை தோட்டபகுதியில் மக்கள் பாவனைக்கு பயன்படுத்தும் நீரினை தனியார் தொழிற்சாலைக்கு கொண்டு செல்ல முயற்சித்த சம்பவம் தொடர்பில் குறித்த தோட்ட உதவி முகாமையாளர் சாஞ்சிமலை தோட்ட பெண் தொழிலாளர்களை கடந்த இரண்டு வாரத்திற்கு முன்பு தகாத வார்ததையில் பேசியதன் தொடர்பில் குறித்த உதவி முகாமையாளரை தோட்டத்தை விட்டு வெளியேருமாறு மக்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

10.04.2019 புதன்கிழமை சாஞ்சிமலை தோட்ட தொழிலாளர்களுக்கு மாதாந்த வேதனத்தை தோட்ட உதவி முகாமையாளர் வழங்க முன்வந்தமையால் குறித்த உதவி முகாமையளரிடம் இருந்து எங்கள் வேதனத்தை பெற்று கொள்ளமட்டோம் என கோரி மாலை 04 மணியளவிலிருந்து இரவு 8 மணி வரை தோட்ட காரியாலயத்திற்கு முன்பு சாஞ்சிமலை தோட்டமக்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

அதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு நோர்வூட் மற்றும் அட்டன் ஆகிய பொலிஸார் வரவழைக்கபட்ட போது மக்களுக்கு இடையில் அமைதியின்மையும் ஏற்பட்டது. இதே வேளை ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் சாணத்தினை கரைத்து தோட்ட உதவி முகாமையாளருக்கு ஊற்றுவதற்கும் தயார் நிலையில் இருந்த வேளை பொலிஸாரின் முயற்சியால் அது முறியடிக்கபட்டது.

நோர்வூட் பொலிஸார் மற்றும் நோர்வூட் பிரதேச சபையின் தலைவர் ரவி குழந்தைவேல் ஆகியார் சம்பவ இடத்திற்கு வருகை தந்து சாஞ்சிமலை தோட்ட முகாமையாளர் குறித்த மக்களுக்கு வேதனத்தை வழங்குமாறு உத்தரவு பிறப்பிக்கபட்ட பிறகு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் இரவு 08.30 மணியளவில் தமது வேதனத்தை பெற்று கொண்டு ஆர்பாட்டத்தினை கைவிட்டு சென்றமை குறிப்பிடதக்கது.