நாட்டுக்காக ஒன்றிணைவோம் வேலைத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பயனடைந்துள்ளனர்

மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படும் நாட்டுக்காக ஒன்றிணைவோம் என்ற வேலைத்திட்டத்தின் இரண்டாம் நாளான நேற்று சுமார் ஒரு இலட்சம் பொது மக்கள் நன்மை அடைந்துள்ளனர்.

இந்த வேலைத்திட்டம் கடந்த 8 ஆம் திகதி ஆரம்பமானது. அபிவிருத்தி மற்றும் சேவைகளை உள்ளடக்கயி 386 திட்டங்கள் பூர்த்தி செய்யப்பட்டன. .இதில் 96 000 738 பேருக்கு நன்மைகள்

 

கடைத்துள்ளன.  இதற்காக 15.49 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.இதன் போது மாவட்டத்தில் 15 பிரதேச செயலக பிரிவுகளில் இந்த திட்டங்கள் நடைமுறைப்படுப்பட்டுள்ளன. ஆகக் கூடுதலான தொகை மன்முணை வடக்கு பிரதேச செயலக பிரிவில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இது சுமார் 4.3 மில்லியன் ரூபாவாகும். பின்தங்கிய பிரதேச செயலகமான கோரளைப்பற்று தெற்கு பிரதேச செயலக பிரிவிற்காக 2.6 மில்லியன் ரூபாவிற்கும் மேற்பட்ட தொகை செலவிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி செயலகத்தின் மூலம் முன்னெடுக்கப்பட்டுள்ள 76 செயற்திட்டங்கள் கிழக்கு மாகாண சபையின் மூலம் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் மற்றும் மத்திய அரசாங்கத்திற்கு உட்பட்டதாக 274 இன் கீழ் இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

தேசிய சுற்றாடல் பாதுகாப்பு வேலைத்திட்டத்தின் கீழ் 96 வேலைத்திட்டங்களும் தேசிய போதைப்பொருள் ஒழிப்பு வேலைத்திட்த்தின் கீழ் 68 திட்டங்களும் தேசிய உணவு உற்பத்தியின் கீழ் 29திட்டங்களும் கிரா சக்தி வேலைத்திட்டத்தின் கீழ் 16 திட்டங்களும் பல்வேறு தேசிய வேலைத்திட்டங்கள் பலவும் நாட்டுக்காக ஒன்றிணைவோம் என்ற வேலைத்திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.