14 ஆயிரம் கிராம சேவர் பிரிவிலுள்ள சிறிய வீதிகள் ஒரே தடவையில் அபிவிருத்தி”

வரலாற்றில் முதல் தடவையாக வடக்கு கிழக்கு உட்பட நாட்டிலுள்ள 14 ஆயிரம் கிராம சேவகர் பிரிவுகளில் இருக்கும் சிறிய வீதிகளை ஒரேதடவையில் அவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நெடுஞ்சாலைகள், வீதி அபிவிருத்தி மற்றும் பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சின் கண்காணிப்பு உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார்.

 

அடுத்த மாதம் 12 ஆம் திகதி இந்த வேலைத்திட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாகவும், 1,714 கோடி ரூபாவை செலவழித்து 1,970 கிலோ மீற்றர் தூரத்துக்கு வீதிகள் அமைக்கப்படுவதுடன் 200 பாலங்களும் அமைக்க உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.