மட்டக்களப்பு ஓய்வூதிய திணைக்களத்தினால் நடமாடும் சேவை இடம்பெற்றது.

(க. விஜயரெத்தினம்)
மட்டக்களப்பு ஓய்வூதிய திணைக்களத்தினால் நடமாடும் சேவை மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின்  “நாட்டிற்காக ஒன்றினைவோம்” என்ற தேசிய திட்டத்திற்கு  அமைவாக மட்டக்களப்பு  மாவட்டத்தில் 8 ஆம் திகதி முதல் 12 ஆம் திகதி வரை மக்களின் இதுவரை தீர்க்க படாத பிரச்சனைகளை தீர்த்து வைப்பதற்காக மாவட்டத்தின் 14 பிரதேச பிரிவுகளிலும் விசேட வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

அதனடிப்படையில் இன்று செவ்வாய்க்கிழமை(9) மட்டக்களப்பு ஓய்வூதிய திணைக்களத்தினால் நடமாடும் சேவை ஒன்று மண்முனை வடக்கு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் காலை 9.30 மணியளவில் நடைபெற்றது.

மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் எம்.தயாபரன் தலைமையில் நடைபெற்ற இந்த நடமாடும் சேவையில் ஓய்வூதியம் சம்பந்தமாக காணப்படுகின்ற பிரச்சனைகள் மற்றும் அது    சம்மந்தமான    தீர்வுகளை    பெற்றுக்கொள்ளமுடியும்.

இந்நிகழ்வில் ஓய்வூதிய திணைக்களத்தின் உதவிப்பணிப்பாளர்  R.M.A.I.ரத்நாயக்க,மாவட்ட ஓய்வூதிய திணைக்கள உதவிப்பணிப்பாளர்  W.G.W.ஞானதயாளன்,மாவட்ட பிரதம கணக்காளர் கே.ஜெகதீஸ்வரன் மற்றும் ஜனாதிபதி செயலக அதிகாரிகள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.