போதைப் பொருளுக்கு எதிரான கருத்தரங்கு

ஜனாதிபதியின் நாட்டுக்காக ஒன்றினைவோம் செயற்றிட்டம் திங்கட்கிழமை முதல் 12ம் திகதி வெள்ளிக்கிழமை வரை மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலகங்களிலும் முன்னெடுக்கப்படுகிறது.

அந்தவகையில் கோறளைபற்று மத்தி பிரதேச செயலகத்தில் ஏற்பாட்டில் நாட்டிற்காக ஒன்றினைவோம் என்ற செயற்றிட்டத்தின் கீழ் போதைப்பொருள் தடுப்பு நிகழ்வில் போதைப் பொருளுக்கு எதிரான கருத்தரங்கு செயலக கேட்போர் கூடத்தில் செவ்வாய்கிழமை இடம்பெற்றது.

பிரதேச செயலாளர் எஸ்.எச்.முஸம்மில் தலைமையில் நடைபெற்ற போதைப் பொருளுக்கு எதிரான கருத்தரங்கில் வளவாளராக ஜனாதிபதி விசேட செயற்திட்ட ஒருங்கிணைப்பாளரும், ஜனாதிபதியின் மொழி பெயர்ப்பாளருமான தெ.உதயரூபன் கலந்து கொண்டு கருத்துக்களை வழங்கினார்.

இந்நிகழ்வில் சமுர்த்தி தலைமை முகாமையாளர் எம்.ஐ.ஏ.அஸீஸ், செயலக கலாச்சார உத்தியோகத்தர் ஏ.எல்.பீர்முகம்மட், அலுவலக உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.