வாழைச்சேனையில் போதை பொருள் ஒழிப்பு வீதி நாடகம்

ஜனாதிபதியின் “நாட்டுக்காக ஒன்றினைவோம்” செயற்திட்டம் திங்கட்கிழமை முதல் 12ம் திகதி வெள்ளிக்கிழமை வரை மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலகங்களிலும் முன்னெடுக்கப்படுகிறது.

அந்தவகையில் போதை ஒழிப்பு வேலைத் வேலைத் திட்டத்தின் கீழ் வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச செயலகத்தின் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில் போதை பொருள் ஒழிப்பு வீதி நாடகம் இன்று செவ்வாய்கிழமை இடம்பெற்றது.

செயலக சமுர்த்தி தலைமையக முகாமையாளர் திருமதி.தேவமனோகரி பாஸ்கரன் தலைமையில் போதைப் பொருள் அபாயத்தினை ஒழித்து வறுமையினை குறைத்து அபிவிருத்தியினை மேம்படுத்துவோம் என்ற தொனிப் பொருளில் வீதி நாடகம் இடம்பெற்றது.

குறித்த போதை பொருள் ஒழிப்பு வீதி நாடகம் விநாயகபுரம் கிராம மக்கள் மத்தியில் இடம்பெற்றதுடன், வீதி நாடகம் பாடசாலை மாணவர்களால் அரங்கேற்றப்பட்டது.

இவ்வீதி நாடகத்தினை செயலக உத்தியோகத்தர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டு பார்வையிட்டனர்.