பல நாடுகளின் அபிவிருத்திக்கு போதைப்பொருள் பாவனை மிகவும் சவாலாக இருந்தது.

பல நாடுகளின் அபிவிருத்திக்கு   போதைப்பொருள் பாவனை  மிகவும் சவாலாக இருந்தது. அவ்வாறான சந்தர்ப்பங்களில் இந்த நாடுகள் மரண தண்டனையை அமுல்படுத்தியே தனது நாட்டின் அபிவிருத்தியில் வெற்றி கண்டுள்ளது. என பட்டிருப்பு வலயக்கல்வி பணிப்பாளர் நகலேஸ்வரி புள்ளநாயகம் அவர்கள் தெரிவித்தார்.
ஜனாதிபதி செயலகத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் ஒன்றிணைந்த அபிவிருத்திச் செயற்றிட்டங்களுக்கு அமைவாக  மாணவர்களுக்கான  கருத்தங்கொன்று பட்டிருப்பு கல்வி வலயத்தினால் களதாவளை மகா வித்தியாலயத்தில் இன்று நடைபெற்றது இதனை தலைமை தாங்கி நடாத்திய போது தனது தலைமை உரையிலையே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இலங்கையின் அதிமேதகு ஜனாதிபதி அவர்கள் இந்த நாட்டிலே நிலைபேறான அபிவிருத்தியை ஒன்றெடுத்து செல்லும் நோக்குடன் பலதரப்பட்ட நிகழ்வுகள் பலதரப்பட்ட திணைக்களங்கள் ஊடாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அதன் ஒரு கட்டமாகவே இந்த நிகழ்வும் எமது பட்டிருப்பு கல்வி வலயத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதன் ஊடாக எமது நாட்டினை இன்று ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கின்ற போதை பொருள் பாவனை, டெங்கு, சுத்தமான குடி நீர் இன்மை, சுற்றாடல் பாதுகாப்பு போன்ற பல திட்டங்கள் இதனூடாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
ஏன் இவ்வாறான திட்டங்கள் முன்னெடுத்துச் செல்லப்படுகின்றது என்றால் இவை அனைத்துமே ஒரு நாட்டின் அபிவிருத்திக்குத் தடையான விடயங்களாக அமைகின்றது. இவற்றினை இல்லாமல் செய்யும் பட்சத்திலையே ஒரு நாடு நிலையான அபிவிருத்தியை நோக்கி பயணிக்கும். அது மாத்திரமின்றி  நாளைய தலைவர்களாக இருக்ககூடிய மாணவர் மத்தியில் தற்போது போதைப்பொருள் பாவனையானது மிகவும் விரைந்து பரவி செல்வதனை அறியக் கூடியதாக உள்ளது. அன்பான மாணவர்களே நீங்களே நாளைய தலைவர்கள் நீங்களே நாளைய சமூகத்தை முன்னெடுத்துச் செல்வதற்கு இருக்கின்றவர்கள் எனவே இதில் இருந்து விடுபடுவதற்கு நீங்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். இவ்வாறான நிலைகராணமாகவே போதைப்பொருள் தொடர்பில் இந்த நாட்டில் மரண தண்டனை கூட அமுல்படுத்தப்பட இருக்கின்றது.
ஒரு நாடு அபிவிருத்தி அடைக்கின்ற போது இவ்வாறன பல சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கின்றது. நீங்கள் உதாரணமாக பார்தீர்களானால் சிங்கப்பூர் மலேசியா,தாய்லாந் ஆகிய நாடுகள் தங்களது அபிவிருத்திகளை மன்னெடுத்தபோது இவ்வாறான போதைப்பொருள் பாவனை அவர்களுக்கு மிகவும் சவாலாக இருந்தது. அவ்வாறான சந்தர்ப்பங்களில் இந்த நாடுகள் மரண தண்டனையை அமுல்படுத்தியே வெற்றி கண்டுள்ளது. அதேபோல் இந்த இளம் தலைமுறையினர் அவற்றிக்கு எதிரானவர்களாக மாறுகின்ற போது போதைப்பொருளில் இருந்து விடுபட்டு நாட்டின் நிலையான அபிவிருத்தியை நோக்கி செல்லக் கூடியதாக இருக்கும்.
 எனவே மிக முக்கியமாக பாடசாலை மாணவர்களிடையே பல்வேறு வடிவங்களில் இது மாணவர்களுடன் உறவாட வருகின்றது. எமது மாணவர்கள் தற்காலத்தில் விழிப்பாகவும் அதற்கு எதிர்ப்பாகவும் செயற்பட வேண்டியவர்களக இருக்கின்றீர்கள். இப்போதைப் பொருள் பாவனையால் எத்தனையோ குடும்பங்கள் அழிந்து கொண்டு இருக்கின்றது, எத்தனையோ மாணவர்கள் கல்விகற்ற முடியாத நிலையில் திண்டாடிக் கொண்டு இருக்கின்றனர். எத்தனையோ பேர் தற்கொலை செய்தள்ளனர்.
எத்தனையோ பேர் விபத்துக்குள்ளாகி இறந்துள்ளனர் இவ்வாறான பெரிய தாக்கங்களை உண்டுபண்ணும் பொதைப்பொருள் பாவனைக்கு எதிராக நிங்கள் நிற்சயமாக செயற்பட்டு வெற்றிகண்டு எமது நாட்டின் முன்னேற்றத்திற்கு உதவவேண்டும் என அவர் இதன் போது தெரிவித்தார்.