கடற்கரை சுத்திகரிப்பு வேலைத்திட்டம்

நாட்டுக்காக ஒன்றினைவோம் என்ற தொணிப்பொருளில் ஜனாதிபதி செயலகத்தின் ஒருங்கிணைந்த அபிவிருத்தி வேலைத் திட்டத்தினை முன்னிட்டு கடற்கரை சுத்திகரிப்பு வேலைத்திட்டம் இன்று திங்கள் கிழமை (8) மட்டக்களப்பு வாகரை பிரதேசத்தின் வட்டவான் கடற்கரையில் பிரதேச செயலாளர் எஸ்.கரன் தலைமையில் நடைபெற்றது.

சமூக வலுவூட்டல் மற்றும் நலனோம்புகை அமைச்சின் ஆலோசனையின் பிரகாரம் சமூர்த்தி திணைக்களத்தின் வழிகாட்டலினால் கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலக சமூர்த்திப் பிரிவு இவ் செயல் திட்டத்தினை முன்னெடுத்து நடாத்தியது.

வாகரை பிரதேசத்தின் வட்டவான் கடற்கரையை அண்டியுள்ள பொதுமக்கள், ஆலய நிர்வாகத்தினர், கிராம அபிவிருத்தி சங்கங்கள்,மக்கள் சக்தி அமைப்பினர் மற்றும் பிரதேசத்தின் கடற்படையினர் இணைந்து கடற்கரையில் காணப்பட்ட பிளாஸ்ரிக் பொருட்க்கள், உக்கக் கூடடிய மற்றும் உக்காத கழிவுப் பொருட்க்களை அகற்றி சுத்திகரிப்பு வேலைத்திட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன் போது ஜனாதிபதி ஆணைக்குழு தலைமைச் செயலக அதிகாரி இன்றிசேகர,வாகரை பிரதேச செயலக சமூர்த்தி முகாமையாளர்களான திருமதி கலைவாணி கஜேந்திரன், எஸ்.பற்குணராஜா,சமூர்த்தி உள்ளக கணக்காய்வாளர்களான ஏ.முரளிதரன்,சி.உமாச்சந்திரன் ஆகியோர்கள் பங்குபற்றி சுத்திகரிப்பு பணியில் ஈடுபட்டனர்.