கல்முனையில் இனரீதியான ஊடக மாநாட்டுக்கு தடை! மாநகர சபை உறுப்பினர் ராஜன் மற்றும் மதகுருமார் முறைப்பாடு

கல்முனையில் இன்றைய  (7) தினம் கல்முனை மறுமலர்ச்சி மன்றம் எனும் அமைப்பினால் நடாத்த ஏற்பாடுசெய்யப்பட்டிருந்த ஊடக மாநாட்டுக்கு பொலிசார் தடைவிதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 
நேற்று  கல்முனை மாநகர சபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் மற்றும் அம்பாரை மாவட்ட சர்வமத கிளையின் தலைவரும்  கல்முனை விகாராதிபதியுமான ரண்முத்துகல சங்கரத்ன தேரர்இ பரலோகவாசல் தேவாலயத்தின் பிரதம போதகர் கிருபைராஜாஇ கிழக்கு இந்துக் குருமார் ஒன்றியத்தின் தலைவார் சச்சிதானந்த சிவம் குருக்கள் ஆகியோர் கூட்டாக செய்த முறைப்பாட்டையடுத்து பொலிசார் மேற்படி தடை நடவடிக்கையை எடுத்துள்ளதாகத் தெரியவருகின்றது.
 
 
கல்முனையில் தனியார் மண்டபமொன்றில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இம்மாநாட்டின்மூலம் மூவினங்களும் ஒற்றுமையுடன் வாழும் கல்முனையில் இனவன்முறையொன்று ஏற்படுவற்கான வாய்ப்புக்கள் இருப்பதால் அதனை தடைசெய்யுமாறு முறைப்பாட்டுக் காரர்கள் கோரியதை ஏற்றுக்கொண்ட கல்முனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உடனடியாக அதனை தடைசெய்ய நடவடிக்கையெடுத்துள்ளார்.
 
சரியான நேரத்தில் பொறுப்புடன் செயற்பட்ட மாநகர சபையின் உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் மற்றும் சமயத் தலைவர்களுக்கு பொது அமைப்புக்கள் தமது நன்றியைத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.