புலமைப்பரிசில் இரத்து: 8ஆம் ஆண்டில் பரீட்சை

ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசிலுக்குப் பதிலாக 8ஆம் ஆண்டில் பரீட்சையொன்றை வைப்பதற்கான திட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

கடவத்தயிலுள்ள பாடசாலையொன்றில்  நேற்று (05) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

புலமைப்பரிசில் பரீட்சையை இரத்து செய்துவிட்டு, புதியக் கல்வித்திட்டமொன்றை அறிமுகப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது என்று தெரிவித்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

இந்தப் புதியத் திட்டமானது, மாணவர்கள் தமது திறமைகளுக்கேற்ப எதிர்காலத்தை கட்டியெழுப்புவதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக்கொடுப்பதாக அமையும் என்றும் அவர் கூறியுள்ளார்.

8ஆம் ஆண்டில் நடத்தப்படும் இந்தப் பரீட்சையில், மாணவர்கள் தமது திறமைகளுக்கேற்ப தெரிவு செய்த பாடத்துறையின் மூலம், உயர்க் கல்வியைக் கற்பதற்கான வாய்ப்பு வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.