வரலாற்று சிறப்பு கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரத்தில் சித்திரைப்புத்தாண்டு சிறப்பு பூசை வழிபாடுகள்.

வரலாற்று சிறப்புமிகு கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் சித்திரைப்புத்தாண்டு சிறப்பு பூசை வழிபாடுகள் 2019.04.14ம் திகதி நடைபெறவுள்ளன.
பிறக்கவிருக்கின்ற விகாரி வருடப்பிறப்பு பூசை வழிபாடுகள் ஞாயிற்றுக்கிழமை(14) பிற்பகல் 1.15மணிக்கு இடம்பெறவுள்ளன. ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ மு.கு.சச்சிதானந்தக்குருக்கள், ஆலயக்குரு சிவஸ்ரீ வ.சோதிலிங்ககுருக்கள் ஆகியோர்களால் குறித்த பூசை நிகழ்வுகள் நிகழ்த்தப்படவுள்ளன.
புதிய வருடம் 2019.04.14ம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிறக்கவுள்ளதுடன், அன்றைய தினம் காலை 9.12மணி தொடக்கம் பிற்பகல் 5.12மணிவரையுள்ள நேரத்தில் மருத்துநீர் தேய்க்க முடியுமெனவும் கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தினால் வெளியிடப்பட்டுள்ள துண்டுப்பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.