திருக்கோணேஸ்வரத்தின் தேர்உற்சவம்

தெட்சண கைலாயம் எனப்போற்றப்படும் அருள்மிகு திருக்கோணேஸ்வரத்தின் தேர்உற்சவம் இன்று காலை 9.00மணியளவில் கொட்டும் வெயிலிற்கும் மத்தியில் சிறப்பாக இடம்பெற்றது.

பிரமோற்சவத்தின் 17ம்நாளான இன்று நடைபெற்ற இவ்வுற்சவத்தில் மாதுமையம்பாள் சமேத கோணேஸ்வரப்பெருமான் தேரில் வலம் வந்து அருள்பாலித்தார்.; அம்பாள்,பிள்ளையார்,முருகப்பெருமாள் சமேதராக தனித்தனி தேர்களில் அவர்கள் வலம்வந்தனர்.

நாளை அதிகாலை 7.00மணியளவில் பாவநாச தீரத்தசுனையில் தீர்த்த உற்சவம் நடைபெற்வுள்ளதாக ஆலய நிருவாகம் அறிவித்துள்ளது மறுநாள் பூங்காவனத்திருவிழாவும் தெற்பத்திருவிழாவும் இடம்பெறவுள்ளமை குறிப்படத்தக்கது.