எம் மக்களை அப்பறப்படுத்தி, அடாத்தாக LRC காணிகளை அபகரிக்கும் நபர்கள் மீது உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் .

எம் மக்களை அப்பறப்படுத்தி, அடாத்தாக LRC காணிகளை அபகரிக்கும் நபர்கள் மீது உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் . பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் .
இன்று பாராளுமன்றத்தில் (05.04.2019) காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சர் ஜயந்த கருணாதிலக அவர்களிடம் பின்வரும் வினாக்களைத் தொடுத்தார்.
01. மட்டக்களப்பு மாவட்டத்தில் புன்னைக்குடா பிரதேசத்தில் காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவிற்கு சொந்தமான காணியை சட்ட விரோதமாக கைப்பற்றியமைக்கு எதிராக ஆணைக்குழுவினால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன ? என்பதை சபைக்கு அறிவிக்க வேண்டும் .
02. காணி (பாராதீனப்படுத்தல் மீதான மட்டுப்பாடுகள் ) சட்டத்தின் பிரகாரம் மட்டக்களப்பு மாவட்டத்தின் காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் கீழ் வருகின்ற மேற்படி காணி தொடர்பாக ஆணைக்குழுவினால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன?
03.மாவட்ட செயலாளரால் ஆணைக்குழுவின் தலைவருக்கு எழுதப்பட்ட ADMGC(MN)3/7 எனும் இலக்க, 2016. 05.16 திகதிய கடிதம் மூலம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் பிரகாரம் ஆணைக்குழுவிற்குச் சொந்தமான அக் காணிகள் தொடர்பில் மேற்கொண்ட சட்டவிரோதமான அத்துமீறல்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கை யாவை?
04. ஆணைக்குழு தலைவரினால் MADA/75,76,77 இலக்க 2016.09.26 ஆம் திகதி நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை சம்பந்தமாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன ?
05. பிரதமரின் அறிவுறுத்தலுக்கமைய நியமிக்கப்பட்ட CH/LRC/01ஆம் இலக்க 2017/08/10 ஆம் திகதிய விசாரணைக் குழுவின் அறிக்கை தொடர்பில் ஆணைக்குழு தலைவரால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? என்பதை இச்சபைக்கு அறிவிக்க வேண்டும் என கேட்டார் . அத்துடன் எம் மக்கள் பரம்பரையாக வாழ்ந்து வரும் காணிகளிலிருந்து அப்புறப்படுத்தக் கூடாது .
அதற்குப் பதிலளித்த காணி அமைச்சர் விரைந்து நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.