நிழல் பிரதி இயந்திரம் வழங்கி வைப்பு

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட முனைக்காடு சாரதா வித்தியாலயத்திற்கு இன்று(04) வியாழக்கிழமை நிழல்பிரதி இயந்திரமொன்று வழங்கி வைக்கப்பட்டது.

முனைக்காடு கிராமத்தினைச் சேர்ந்த, கனடாவில் வதியும் குணமலர் ஏரம்பமூர்த்தி குடும்பத்தினரால் இந்நிழல் பிரதி இயந்திரம் வழங்கி வைக்கப்பட்டது.

குறித்த நிழல் பிரதி இயந்திரத்தினை முனைக்காடு கிராமத்தினைச்சேர்ந்த ஓய்வுபெற்ற உதவிக்கல்விப் பணிப்பாளர் ரஞ்சிதமலர் கருணாநிதி மட்டக்களப்பு மேற்கு வலயக்கல்விப் பணிப்பாளரிடம் ஒப்படைத்தார்.

இதனை குறித்த முனைக்காடு சாரதா வித்தியாலய மாணவர்களின் பயன்பாட்டிற்காக பாடசாலையின் அதிபர் சு.ரவிசங்கரிடம் மட்டக்களப்பு மேற்கு வலயக்கல்விப் பணிப்பாளர் சி.சிறிதரன் கையளித்தார்.
நீண்ட நாட்களாக இப்பாடசாலைக்கு நிழல்பிரதி இயந்திரத்தின் தேவை அவசியமாகவிருந்த நிலையில், குறித்த உதவியினை இன்றைய தஜனம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.