மண்முனை பாலத்தடியில் குவிந்த மாணவர்களும், உத்தியோகத்தர்களும்.

மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட மண்முனை பாலத்தடியில் குவிந்த மண்முனை தென்மேற்கு பிரதேச செயலக, பிரதேசசபை உத்தியோகத்தர்களும், மாணவர்களும் மகிழடித்தீவு சந்திவரை பொலித்தீன், பிளாஸ்ரிக் பொருட்களை அகற்றும் பணியினை இன்று(04) வியாழக்கிழமை முன்னெடுத்தனர்.

ஜனாதிபதியின் செயற்றிட்டங்களில் ஒன்றான பொலித்தீன், பிளாஸ்ரிக் அற்ற சூழலை உருவாக்கும் செயற்பாட்டின் கீழ் இப்பணி முன்னெடுக்கப்பட்டது.

வாவிக்கரை சூழலை சுத்தம் செய்தலும், பொலித்தீன், பிளாஸ்ரிக் அற்ற சூழலை உருவாக்கும் நோக்கில் முதற்கட்டப் பணி இன்று ஆரம்பிக்கப்பட்டதுடன், தொடர்தேர்ச்சியாக பிரதேசத்தில் பொலித்தீன், பிளாஸ்ரிக் பாவனையை இல்லாமல் செய்யும் வகையில் சிரமதானப்பணிகள், விழிப்புணர்வுகளும் நடைபெறவுள்ளன.

இப்பணியில், மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் தெட்சணகௌரி தினேஸ், மண்முனை தென்மேற்கு பிரதேசசபை தவிசாளர் சி.புஸ்பலிங்கம் உள்ளிட்டோரும் பங்கேற்றிருந்தனர்.

இதன்போது, பெருமளவிலான பொலித்தீன், பிளாஸ்ரிக் பொருட்களும் அகற்றப்பட்டன.