தமிழ் – சிங்கள புத்தாண்டிலோ, அதற்குப் பின்னரோ மின்வெட்டு இடம்பெறமாட்டா

சித்திரைப் புத்தாண்டு சமயத்திலோ அதற்குப் பின்னரோ மின்வெட்டு இருக்காது என அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

பம்பலபிட்டி சென்போல்ஸ் மகளிர் கல்லூரியில் இடம்பெற்ற பரிசளிப்பு வைபவத்தில் உரையாற்றிய போது அமைச்சர் இந்தக்கருத்தை வெளியிட்டார்.

2010ஆம் ஆண்டு தொடக்கம் தேசிய மின் விநியோக வலைப்பின்னலில் ஒரு மெகாவோட் மின்வலு வேனும் மேலதிகமாக சேர்க்கப்படவில்லை. எனவே, மின்வலுவை சிக்கனமாக பயன்படுத்தவேண்டுமென மின்வலு எரிசக்தி அமைச்சர் கேட்டுக்கொண்டார். நீண்டகாலத்திட்டங்களின் அடிப்படையில் சரியான தீர்மானங்களை மேற்கொள்ளப் போவதாகவும் அவர் கூறினார்.